சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த தருணம் எப்படி இருந்தது என்பது பற்றி பிரபல நடிகர் ரோபோ சங்கர் சில தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க…
ரஜினிகாந்தை நிறைய ஷோவுல பார்த்துருக்கேன். சிங்கப்பூர் ஷோவுல வந்து நடிகர் சங்கத்துக்காகப் போனோம். அப்போ கூப்பிட்டுத் தோள்ல கைபோட்டு போட்டோ எடுத்துக்கிட்டாங்க. ‘வெட்டிங் டே’ அன்னைக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி பேமிலியோட பாண்டிச்சேரிக்குப் போறோம். 12 மணிக்கு சரக்குலாம் போட்டுட்டு ஜாலியா இருக்குறேன்.
அங்கேப் போனா ‘ரஜினி சாருக்கு இங்க தான் சூட்டிங் போகுது’ன்னு சொன்னாங்க. ‘விடுறா வண்டியை’ன்னு சொன்னேன். அங்கே போனா ரஜினி சார் நிக்கிறாரு. கட்டிப்பிடிச்சிப் போட்டாலாம் எடுத்தாச்சு. என்ன பார்த்ததும் ‘என்ன ரோபோ… எங்கே..? வெட்டிங் டே வா..? என்ஜாய்… என்ஜாய்.. ஜாக்கிரதை!’ ன்னு அவரோட ஸ்டைல்ல சொன்னாரு.
அதுக்கு அப்புறம் நிறைய பங்ஷன்ல பார்த்தேன். பிரசாத் ஸ்டூடியோவுல கமல், ரஜினி இருவரும் ஒரே செட்ல இருக்காங்கன்னு சொன்னாங்க. கமல் சாரை முதல்லயே பார்த்துட்டுப் போனேன். அடுத்து ரஜினி சாரைப் பார்க்கும்போது அவரு என்னோட ஆர்ம்ஸைத் தொட்டுத் தொட்டுப் பார்க்காரு. ‘பாடியை நல்லா பிட்டா வச்சிருக்க…ன்னு சொன்னாரு.
அப்புறம் சைகைல தண்ணி, சிகரெட் எதுவும் உண்டா’ன்னு கேட்டாரு. ‘இல்ல’ன்னு சொன்னேன். ‘அதெல்லாம் நமக்கு வேணாம். விட்டுரு. நமக்குன்னு குடும்பம், பாப்பா கல்யாணம்னு இருக்கு. அது வேற லைஃப். அதுல என்ஜாய் பண்ணுவோம்’னு சொல்லிட்டு என்னையே உத்துப் பார்க்காரு. ‘ஜிம்முக்குலாம் போறியா?’ன்னு கேட்டாரு.
அப்புறம் என்னை நல்லா ரசிச்சிப் பார்த்தாரு. நிறைய wish பண்ணி bless பண்ணி அனுப்பிச்சாரு. நானும், வைஃப் இருக்கும் போட்டாவுல கூட லெப்ட் சைடுல ரஜினி வாழ்த்தி சைன் போட்டுருப்பாரு. ரைட் சைடுல கமல் வாழ்த்தி சைன் போட்டுருப்பாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…