1. Home
  2. Throwback stories

ரஜினி - ஸ்ரீதேவி காதல் உண்மையா? சூப்பர்ஸ்டாருக்கு அந்த நினைப்பு வேற இருந்ததாமே..!

ரஜினி, ஸ்ரீதேவி காதலில் நடந்தது என்ன? என்பது குறித்த தகவல்

கமல், ரஜினி இருவரும் திரைத்துறையில் கோலோச்சிய காலகட்டத்தில் நடிகை ஸ்ரீதேவி தான் முக்கிய கதாநாயகி. பதினாறு வயதினிலே படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமணி, காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரஜினி தான் வில்லன்.

ஸ்ரீதேவியை கிளைமாக்ஸில் அடையத் துடிப்பார். ஆனால் கமல் அவரைத் தீர்த்துக் கட்டுவார். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் பரட்டையாக நடித்துள்ள ரஜினியின் ஸ்டைல் மாஸாக இருக்கும்.

மூன்று முடிச்சு படத்தில் கமலை ஒழித்துக் கட்டிவிட்டு ரஜினி ஸ்ரீதேவியை அடையத் திட்டம் போடுவார். தாயில்லாமல் நானில்லை படத்தில் கமல், ஸ்ரீதேவி, ரஜினி தான் நடித்திருப்பார்கள். இதில் ரஜினி பிச்சுவா பக்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கமலுடன் சண்டை போடுவார்.

இப்படி படங்களில் ரஜினியின் வில்லத்தனம் ஸ்ரீதேவியை அடையவே முக்கியக் காரணமாக காட்டப்பட்டு இருக்கும். அதே போல ரஜினியுடன் ஜோடியாகவும் பல படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். ஜானி, கவிக்குயில், காயத்ரி, வணக்கத்துக்குரிய காதலியே, நான் அடிமை இல்லை, பிரியா போன்ற படங்களைச் சொல்லலாம்.

ஒரு கட்டத்தில் ரஜினிக்கும், ஸ்ரீதேவிக்கும் காதல் என்றும் ரஜினி திருமணம் செய்து கொள்ள நினைத்தார் என்றும் பேசப்பட்டது. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் இப்படி கேள்வி கேட்டுள்ளார். ரஜினிக்காக ஸ்ரீதேவி விரதம் இருந்ததுக்கு காரணம் என்ன? இரண்டு பேரும் லவ் பண்ணினாங்களான்னு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.

ரஜினி மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்த நடிகை தான் ஸ்ரீதேவி. அவர்கள் இருவரும் காதலித்ததாக சொல்ல முடியாது. ஆனால் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஒரு தடவை ரஜினிகாந்திடம் இருந்தது உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதே காலகட்டத்தில் ரஜினியும், ஸ்ரீதேவியும் சில படங்களில் நடித்து இருந்தாலும் அதிகமான படங்களில் கமலுடன் தான் ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.