ரஜினியை சூப்பர்ஸ்டாராக்கிய பைரவி படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். அவரது மகனும் தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…
நடிகர் விஜயகுமாருக்கு ‘கைகொடுக்கும் கை’ என்ற படத்துக்குக் கால்ஷீட் கொடுக்காரு. விஜயகுமார் என்ன தயாரிப்பாளரா? எத்தனை படம் தயாரிச்சிருக்காரு? அவரைத் தேடிப் போய் கால்ஷீட் கொடுக்காரு ரஜினி. ஆனா ரஜினியை சூப்பர்ஸ்டார் ஆக மாற்றிய படத்தை இயக்கிய எங்க அப்பாவுக்குக் கால்ஷீட் கொடுக்கலை. ரஜினி பாடுறாரு.
ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழ் அல்லவான்னு. ஆனா தமிழ் மக்களுக்கு எதுவுமே ரஜினி செய்யலை. அருணாச்சலம் படத்துக்கு அவரோட பழைய நண்பர்கள், கூட இருந்தவங்க, இயக்குனர், தயாரிப்பாளர்கள் என 9 பேருக்கு எதுவுமே அவங்க கொடுக்காம படத்தோட லாபத்துல ஒரு குறிப்பிட்ட சதவீதம் கொடுக்குறதா சொன்னாரு. அதுக்காக அப்பாவைக் கூப்பிட்டாரு. அதுல அப்பா விருப்பமில்லைன்னுட்டாங்க.
அதாவது எனக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்புன்னு 5 வேலை தெரியும். இதுல ஏதாவது ஒண்ணைக் கொடுத்து செய்யுங்கன்னு சொல்லுங்க. அது இல்லாம சும்மா இலவசமா லாபத்துல பங்கைத் தருவதுல எனக்கு உடன்பாடு இல்லைன்னு சொல்லிட்டாங்க.
அது மட்டுமல்லாம உங்க நல்ல மனசுக்கு நன்றின்னும் சொல்லிட்டாங்க. அதே மாதிரி இயக்குனர் ஸ்ரீதர்கிட்டயும் ரஜினி சார் கேட்டுருக்காரு. அவரும் கிட்டத்தட்ட அப்பா சொன்ன பதிலையே சொல்லிட்டாரு. இதுதான் நடந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மகேந்திரன் இயக்கத்தில் 1984ல் ரஜினிகாந்த் நடித்த படம் கைகொடுக்கும் கை. இளையராஜா இசை அமைத்துள்ளார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரேவதி நடித்துள்ளார். வி.எஸ்.ராகவன், சௌகார் ஜானகி, ஒய்.ஜி.மகேந்திரன், பூரணம் விஸ்வநாதன், தேங்காய் சீனிவாசன், சின்னி ஜெயந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே பிரமாதம். ஆத்தா பெத்தாலே, கண்ணுக்குள்ளே யாரோ, தாழம்பூவே வாசம், பாத்தா படிச்ச புள்ள ஆகிய பாடல்கள் உள்ளன. கிளைமாக்ஸ் சொதப்பியதால் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…