1. Home
  2. Latest News

எம்எஸ்வி-யே பார்த்து வியந்த பாடலாசிரியர்.. அவங்க எழுதிய முதல் மற்றும் கடைசி பாடல் இதுதான்..


மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்எஸ் விஸ்வநாதன் பார்த்து வியந்த பாடலாசிரியர் யார் என்றால் ரோஷனாரா பேகம்தான். அப்படி அவர் என்ன செய்தார் என்பதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். குடியிருந்த கோயில் என்ற திரைப்படத்தை சொன்னாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது குங்குமப்பொட்டின் மங்கலம் பாடல் தான்.

கூடவே ஞாபகத்திற்கு வருவது ஜெயலலிதாவின் நளினமான ஆட்டமும், எம்ஜிஆரின் நடனமும் தான். இரண்டு முன்னாள் முதல்வர்கள் நடித்த அந்த பாடலை எழுதியவர் ரோஷனாரா பேகம். இஸ்லாமிய பெண்கள் இன்று திரைத்துறைக்கு வருவது பெரிய சவாலாக இல்லை என்றாலும், கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு முன்பு 1968 ஆம் ஆண்டு திரைபாடலை எழுதியவர் ரோஷனாரா பேகம்.


இதில் துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால் ரோஷனாரா பேகம் எழுதிய முதலும் கடைசியுமான பாடல் இதுதான். 60களில் மிக திறமையான பெண் பாடல் ஆசிரியராக இருந்தவர் தான் ரோஷனாரா பேகம். இவரின் அற்புதமான திறமையையும் ஆர்வத்தையும் அறிந்த எம்எஸ் விஸ்வநாதன் தயாரிப்பாளர் ஜி என்ற வேலுமணி இடமிருந்து இவருக்கு பாடல் எழுத வாய்ப்பு தர வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது.

பின்னர் அந்த தயாரிப்பாளரும் சம்மதம் தெரிவித்தார். 1968 ஆம் ஆண்டு சைனா டவுன் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மறு உருவாக்கமான குடியிருந்த கோவில் என்ற திரைப்படத்தின் பாடல் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் குங்குமப்பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டின் சங்கமம் என பல்லவியை எழுதி தர தயாரிப்பு தரப்பிலிருந்து பாடலின் பல்லவி உடனே ஓகே செய்யப்பட்டது.

இஸ்லாமிய பெண் பாடல் ஆசிரியரான ரோஷனாரா பேகம் நெஞ்சம் இரண்டின் சங்கமம் என்ற குடியிருந்த கோயில் திரைப்படப்பாடல் அன்றிலிருந்து இன்றுவரை பல இளம் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் ஒரு வசீகரப் பாடலாக இருந்து வருகின்றது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களாக இருந்த எம்ஜிஆர்-ம் ஜெயலலிதாவும் இணைந்து நடித்திருக்கும் இந்த பாடலிலே ரோஷனாரா பேகம் எழுதிய முதல் பாடல் ஆகும்.

துரதிஷ்டவசமாக இந்த பாடல் தான் அவர் எழுதிய இறுதிப் பாடலாகவும் இருந்தது. அவருக்கு மட்டுமின்றி திரையி சை ரசிகர்களுக்கும் ஒரு பேரிழப்பே. ஒரு இஸ்லாமிய பெண் அக்காலத்தில் பாடலாசிரியராக இருந்தது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அவர் தொடர்ந்து பாடல் எழுதாமல் போக சில கட்டுப்பாடுகளே காரணம் எனக் கூறப்பட்டது.


இவரின் பாடல் வரிகளை கண்டு எம்எஸ் விஸ்வநாதன் வியந்திருக்கின்றாராம். அதாவது ரோஷனாரா பேகம் அவர்களின் தந்தை ஷேக் முஸ்தபா தனது மகளின் திறமையை உணர்ந்து கலை துறையில் தன்னுடன் நட்பு பாராட்டி வந்த மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் தன் மகள் குறித்து கூறியிருக்கின்றார். அதன்பிறகு ரோஷனாராவின் பாடல் வரிகளை படித்து பார்த்து வியந்த எம் எஸ் விஸ்வநாதன் கலைத்துறையில் அவரின் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக அந்த படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.