திருவிளையாடல் படத்தில் சிவனாக சிவாஜியும், நக்கீரராக இயக்குனர் ஏ.பி.நாகராஜனும், தருமியாக நாகேஷூம் நடித்து அசத்தி இருப்பார்கள். இப்படி ஒரு படத்தை நாம் பார்த்திருக்கவே மாட்டோம். சிவபெருமானை நேரில் பார்த்தது போல அப்படி ஒரு பிரமிப்பான தோற்றத்துடன் சிவாஜி மேக்கப் போட்டு அசத்தி விட்டார்.
நக்கீரராக வந்த ஏபி.நாகராஜனும் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதே நேரம் பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ் தருமியாக நடித்து இப்படி ஒரு நடிப்பை இனி யாருமே தர முடியாது என்ற வகையில் நிரூபித்து விட்டார். இந்தக் காட்சியை எத்தனை தடவைப் பார்த்தாலும் சலிக்காது. படத்தின் இயக்குனர் நக்கீரராக நடித்த ஏ.பி.நாகராஜன் தான்.
படத்தில் ஆரம்பத்தில் நக்கீரராக நடிக்க எஸ்.வி.ரங்கராவ் பெயர் சிபாரிசுல இருந்ததாம். அப்போது அவர் நல்லா நடிப்பார். ஆனா தமிழில் இவ்வளவு சரளமாகப் பேச முடியுமா என்று தயங்கினர்.
தொடர்ந்து கவியரசர் கண்ணதாசனையும் சொல்ல, அவர் நன்றாகத் தமிழ் பேசுவார். ஆனால் கம்பீரம் எதிர்பார்த்த அளவு இருக்காது. அதே போல நடிகர் திலகம் சிவாஜி அடுத்து யாரைப் போடுவது என யோசனையில் இருந்தார்.
‘நக்கீரராக நீங்களே நடிக்கலாமே’ என சிவாஜி சொல்ல, அதற்கு ‘நான் நடிச்சி ரொம்ப நாளாச்சு. இப்பப் போய் நடிக்கணுமா’ன்னு கேட்டாராம். உடனே ‘அந்தக் கேரக்டரில் நடிக்க தங்கராஜ் என்பரை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். அதனால் அவரே நடிக்கட்டுமே’ என்று சொன்னாராம் ஏ.பி.நாகராஜன்.
ஆனாலும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இயக்குனரை நடிக்க வைப்பதில் விடாப்பிடியாக இருந்தார். ஒரு கட்டத்தில் ‘நாளை நீங்க நக்கீரராக நடித்தால் தான் நான் சூட்டிங்கிற்கே வருவேன்’ என்றாராம் சிவாஜி. அதன்பிறகு தான் அவர் அந்தக் கேரக்டரில் நடித்தாராம்.
சிவாஜி ஒரு விஷயத்தில் இறங்கி முடிவு எடுத்துவிட்டார் என்றால் அதில் இருந்து பின்வாங்க மாட்டார். அந்தக் காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் ரிஸ்க் எடுப்பார் என்பதையே இந்த சம்பவம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…