எம்.எஸ்.வி பண்றது எரிச்சலா இருக்கும்!.. ஆனா?!.. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சொன்ன தகவல்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 18:20:42  )
எம்.எஸ்.வி பண்றது எரிச்சலா இருக்கும்!.. ஆனா?!.. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சொன்ன தகவல்!..
X

தமிழ் சினிமாவில் இளையராஜா வருவதற்கு முன் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.வி. 50, 60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இவர். ரசிகர்களால் மெல்லிசை மன்னன் என்றும் அழைக்கப்பட்டவர். சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டு பின்னர் சினிமாவுக்கு வந்தவர் இவர்.

சிறுவனாக இருக்கும்போது தியேட்டரில் ஸ்னேக்ஸ் விற்கும் வேலை கூட செய்திருக்கிறார். அப்போது திரையில் நடிகர்கள் பாடும் பாடல்களை பார்த்து அவருக்கு இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின் சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக சேர்ந்து சினிமாவுக்கான இசையை கற்றுக்கொண்டார்.

ஒருகட்டத்தில் தனியாகவும் இசையமைக்க துவங்கினார். 60களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு ஆஸ்தான இசையமைப்பாளர் இவர்தான். அவர்களுக்கு மட்டும் அல்ல. ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய் சங்கர் என அடுத்த வரிசையில் இருந்த எல்லா நடிகர்களுக்கும் இசையமைத்தார்.

எம்.எஸ்.வியின் இசையில் அதிக பாடல்களை பாடியது பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்தான் என்றாலும் 70களில் எஸ்.பி.பி வந்தார். துவக்கத்தில் எஸ்.பி.பி வாய்ப்பு கொடுக்க தயங்கிய எம்.எஸ்.வி. ஒருகட்டத்தில் அவருக்கு பாட வாய்ப்பு கொடுத்தார். எம்.எஸ்.வியின் இசையில் எஸ்.பி.பி. பல இனிமையான பாடல்களை பாடியிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய எஸ்.பி.பி ‘எம்.எஸ்.வி சார் ஒரு பாடலை ஒரே மாதிரி பாடவே மாட்டார். மாற்றிக்கொண்டே இருப்பார். அவர் நமக்கு பாட்டு சொல்லி கொடுத்து ரிக்கார்டிங் தியேட்டரில் பல்லவியை பாட துவங்கும்போது நிறுத்த சொல்லுவார்.

ஆர்மோனியத்தை எடுத்து வந்து மீண்டும் அதையே சொல்லி கொடுப்பார். ‘நாம் அதைத்தானே பாடப்போகிறோம். ஏன் திரும்ப திரும்ப சொல்கிறார்?’ என நமக்கே கோபம் வரும். ஆனால், பாடல் ஸ்ருதி மாறாமல் கச்சிதமாக வரவேண்டும் என்பதற்காகவே அப்படி செய்தார் என்பது பாடலை கேட்ட பின்னரே நமக்கு புரியும்’ என பாராட்டி பேசியிருந்தார் எஸ்.பி.பி.

Next Story