More
Categories: Flashback

கண்ணதாசனை ஏமாற்றிய பிரபல நடிகை… பதிலுக்கு கவிஞர் என்ன செய்தாருன்னு தெரியுமா?

கவியரசர் கண்ணதாசன் ஒரு படம் தயாரிக்க விரும்பினார். அதற்காக சாவித்திரியிடம் பேசி இருந்தார். அந்த நேரம் பார்த்து சாவித்திரிக்கு எம்ஜிஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதனால் தனது மொத்த கால்ஷீட்டையும் அந்தப் படத்துக்கேக் கொடுத்து விட்டாராம். ஆனால் கவியரசர் சும்மா விடுவாரா? அவர் என்னதான் செய்தாருன்னு பாருங்க.

1962ல் இந்தியா, சீனா போர் நடந்தது. இந்தியாவுக்கு சற்றே பின்னடைவு. தொடர்ந்து இந்திய அரசு மீதும், ராணுவம் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அந்த நேரம் மக்களுக்கு தேசப்பற்றை ஊட்ட நினைத்தார் கண்ணதாசன். அதனால் ‘ரத்த திலகம்’ என்ற படத்திற்கு கதை, திரைக்கதை எழுதினார். பஞ்சு அருணாச்சலம் தயாரிக்க சிவாஜி, சாவித்திரி நடித்தனர்.

Advertising
Advertising

இந்தப் படம் நடிக்கும்போதே சாவித்திரிக்கு எம்ஜிஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அதனால் வந்த வாய்ப்பை விடக்கூடாதுன்னு நினைத்த சாவித்திரி மொத்த கால்ஷீட்டையும் அவரது படத்திற்குக் கொடுத்துவிட்டார். இதுகுறித்து கண்ணதாசனின் உதவியாளர் வீரய்யா சாவித்திரியிடம் பேசியுள்ளார்.

‘மொத்த கால்ஷீட்டையும் எம்ஜிஆர் படத்திற்குக் கொடுத்தாச்சு. அதனால அது முடிஞ்சா தான் உங்க படத்தைப் பண்ண முடியும்’னு சொல்லிடுறாங்க. அப்புறம் கண்ணதாசன் இதைக் கேட்டதும் உடனடியாக சாவித்திரிக்குப் போன் போட்டு கண்டபடி திட்டியுள்ளார். ‘டேட் கொடுக்கலைன்னா பிலிமைக் கொளுத்திடுவேன்’னு சொல்லிட்டாராம்.

சாவித்திரி ஒண்ணுமே பேசாம போனை வைத்துவிட்டாராம். அப்போது வீரய்யா போன் போட்டு சாவித்திரியிடம் பேசினார். ;கவிஞர் பேசியது சரியல்ல. என்கிட்ட மன்னிப்பு கேட்டா தான் டேட் தருவேன்;னுட்டாரு சாவித்திரி. இந்தப் பிரச்சனை பெரிதாக, அது சிவாஜி தம்பி சண்முகத்திற்குச் செல்கிறது.

‘கவிஞரே, நீங்க கவலைப்படாதீங்க. நான் முடிச்சி விடுறேன்’னு சொல்றார் அவர். சாவித்திரி நடிக்கச் செல்லும் ஸ்டூடியோக்களுக்கு எல்லாம் அவர் செல்கிறார். ‘ஏன் இப்படி அலையறீங்க? நான் தான் முடியாதுன்னு சொல்லிட்டேனே’ என்கிறார் சாவித்திரி. அப்புறமும் விடாமல் அவர் அலைவதைப் பார்த்து மனம் இறங்குகிறார்.

படம் போர் முடிவதற்குள் வரணும். படத்தை முடக்கினால் கவிஞர் கடனானியாவார்னு சொல்ல, சாவித்திரி டேட் கொடுக்கிறார். 2 கண்டிஷன் போடுகிறார். முழு சம்பளமும் ஒரே பேமெண்ட்ல வேணும். படம் முடியற வரை நீங்க மட்டும் தான் காண்டக்ட் பண்ணனும்னு சொல்றாரு. அதைக் கண்ணதாசனிடம் சொல்ல அவரும் செக் கொடுக்கிறார்.

10 நாளில் சாவித்திரி மேனேஜர் வீரய்யாவுக்கு போன் செய்கிறார். ‘கவிஞர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது’ என்று. உடனே ‘இதை சாவித்திரியிடம் சொல்லிடாதீங்க. ரெண்டே நாளில் பணத்துக்கு ஏற்பாடு பண்றேன்’னு வீரய்யா சொல்கிறார். அதன்பிறகு பணத்தை ரெடி பண்ணிக் கொடுத்து பவுன்ஸ் ஆன செக்கை திருப்பியுள்ளார் வீரய்யா. இப்படி பல சிக்கல்களைக் கடந்து ரிலீஸ் ஆனது ரத்தத்திலகம். படம் உண்மையிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

Published by
ராம் சுதன்