இந்தியில் கமலை ஓரம் கட்டிட்டாங்க. அமிதாப்பச்சன் கமலை வரவிடாமல் பண்றதுக்கு என்னென்ன செய்யணுமோ எல்லாத்தையும் செய்தார். ஒரு இந்திப்படத்தை சென்னையில எடுக்கிறாங்க. அமிதாப் ஹீரோ. கமல் செகண்ட் ஹீரோ. ஸ்ரீதேவி ஹீரோயின். எடுத்துக்கிட்டு இருக்காங்க. ஏவிஎம்ல கமல் நடித்த படம் சூட்டிங் நடக்குது. நான் அங்கே போனேன். யார் ஹீரோன்னு கேட்டேன்.
அமிதாப். கமல் செகண்ட் ஹீரோன்னு சொன்னாங்க. இந்தப் படம் வெளியில வர்றதுக்கு வாய்ப்பு இல்லைன்னு சொன்னேன். அதே மாதிரி பாதி படம் எடுத்துக்கிட்டு இருக்கும்போது படத்தை டிராப் பண்ணிட்டாங்க. கமலை வச்சி படம் எடுத்தா டிராப் ஆகும்னு நெகடிவ் ஹீரோவா கமலை மாத்தி அதைக் காலி பண்ணினாங்க.
கமல் துரதிர்ஷ்டம் பிடிச்சவருன்னாங்க. உடனே ரஜினியைத் தூக்கி விடணும்னு அந்தாதூண் படத்துல கொண்டு வந்தாங்க. அப்புறம் அவரும் அங்க சரியா வரமுடியல. அப்போ அமிதாப்பச்சனுக்கு அரசியல், சினிமா பின்னணி இருந்தது. அதுல கமல் ஒதுங்கிட்டாரு. அன்னைக்கு பாரதிராஜா, கமல் வருகையை பாலிவுட்ல ஏத்துக்க முடியல.
16 வயதினிலே படத்தை இந்தில கொண்டு வரும்போது அதை வெளிய வர முடியாம பண்ணிட்டாங்க. ஒரு தியேட்டர் தான் கொடுத்தாங்க. ஒரு காலைக்காட்சி மட்டும் தான் கொடுத்தாங்க. ஏன்னா கிராமிய படங்கள் வந்தா அமிதாப்பின் படங்கள் அடிவாங்கிடும்னு பயந்துட்டாங்க.
‘ஏக்துஜே கேலியே’ படம் எதிர்பாராத விதமா ரிலீஸ் ஆகி ஹிட் அடிக்க அமிதாப்பின் பல ரசிகர் மன்றங்களைக் காலிபண்ணிடுச்சு. அதுல வந்த ரகளையால தான் கமல், பாரதிராஜாவை ஓரம்கட்டிட்டாங்க. மேற்கண்ட தகவலை பிரபல டாக்டர் காந்தாராஜ் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரெட் ரோஸ் என்ற பெயரில் பாலிவுட்ல ராஜேஷ் கண்ணா நடிக்க இருந்தாராம். ஆனால் அவர் கமலின் நடிப்பைப் பார்த்து விட்டு இதே மாதிரி எல்லாம் என்னால நடிக்க முடியாது. அதை எதிர்பார்க்காதீங்கன்னும் சொல்லிட்டாராம். அதுக்குப் பிறகு தான் நடிக்கவே சம்மதிச்சாராம்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…