தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி மிகப்பெரிய அளவில் மாநில மாநாட்டையும் நடத்தி அசத்தியவர் தளபதி விஜய். இந்த மாநாட்டைப் பார்த்து தமிழகத்தில் பல அரசியல்வாதிகளும் பிரமித்துப் போய் உள்ளனர்.
‘என்னடா ஒண்ணுமே பேசத் தெரியாதுன்னு நினைச்சோம். சினிமா மாதிரி பெரிய சம்பவமே நடத்திட்டாரே’ன்னு ஆச்சரியப்பட்டாங்க. அதிலும் வெற்றி வெற்றி என்ற கொள்கைப் பாடலும் செம மாஸாக இருந்தது. விஜய் என்றாலே வெற்றி என்று ஒரு பொருளும் உண்டு.
ஆரம்பகாலகட்டத்தில் தான் பட்ட அவமானங்களையும் அதன்பிறகு அவர் உழைத்து முன்னேறிய கதையையும் உணர்ச்சிப் பெருக்குடன் மேடையில் கூறினார். அந்தவகையில் தற்போது விஜய் குறித்த ஒரு செய்தி அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அது இதுதான்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பைரவி படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இவரது மகனும் தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு விஜய் குறித்தும் அவருடன் இணைந்து தயாரித்த விஷ்ணு படம் குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
விஜய் சாரையும் ரெண்டு மூணு தடவை பார்த்தோம். ஒருலட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தோம். அப்போ மூணு பேரும் (விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா) இதுக்குத் தான் பணத்தை வாங்கினாங்க.
அப்போ ஷோபா அம்மா சொன்னாங்க. ‘அண்ணே நீங்க தான் விஜய் தம்பிக்கு வாழ்க்கைக் கொடுத்தாங்க. நாங்களே சொந்தப்படம் எடுத்துக்கிட்டு இருந்த காலகட்டத்துல வெளித்தயாரிப்பாளர் யாராவது வர மாட்டாங்களான்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம்.
நீங்க வந்து விஷ்ணுங்கற ஹிட் படத்தைக் கொடுத்தீங்க. அந்த நன்றியை நாங்க மறக்க மாட்டோம். கண்டிப்பா அடுத்தப் படம் பண்ணித்தரோம்’னு சொன்னாங்க. இது உண்மை. உண்மைக்குப் புறம்பா நான் எதையும் சொல்ல மாட்டேன்.
அந்தப் பணத்தைக் கொடுத்ததுக்கு அப்புறம் 96, 97, 98ன்னு காலங்கள் தான் ஓடுதே தவிர விஜய் சாரோட டேட் கிடைக்கல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1995ல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பாலாஜி பிரபு தயாரித்த படம் விஷ்ணு. தேவா இசை அமைத்துள்ளார். விஜய் உடன் சங்கவி, ஜெய்சங்கர், எஸ்.எஸ்.சந்திரன், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…