சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பைரவி படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர். இவரது மகனும் தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு, இயக்குனர் பாலாவின் திமிரான பேச்சு குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தீர்ப்புகள் திருத்தப்படலாம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பௌர்ணமி அலைகள், பன்னீர் நதிகள் என நாலு படங்கள் சிவகுமார் நடித்து இருந்தார். எல்லாமே சூப்பர்ஹிட். அப்பாவுக்கும், சிவகுமார் சாருக்கும் அண்ணன், தம்பி மாதிரி நல்ல நட்பு.
அப்போ சிவகுமார் சார் அப்பாக்கிட்ட வந்து சொன்னாரு. ‘ஆஸ்கர் பிலிம்ஸ் எனக்கு தாய்வீடு மாதிரி. என் பையனை வச்சிப் படம் பண்ணலாம்னு நினைக்கிறேன். அவனுக்கு ஒரு பெரிய ஹிட் கொடுக்கணும். பாலா சார் ஒத்துக்கிட்டாரு.
நீங்க பிளான் பண்ணுங்க’ன்னு சொன்னாரு. அப்பாவும் ஒத்துக்கிட்டாரு. பாலா சார் மட்டும் தனியா அப்பாக்கிட்ட வந்தாரு. ‘என்ன பட்ஜெட்ல எடுப்பீங்க? எத்தனை நாள்ல எடுப்பீங்க? எத்தனை அடி பிலிம் ஆகும்?’னு கேட்டாரு. எல்லாத்துக்கும் ‘தெரியாது’ன்னு பதில் சொன்னார் பாலா.
அது அப்பாவுக்கு ஷாக்கா இருந்துச்சு. அப்பா எல்லாம் ஸ்ரீதர் சார்கிட்ட இருந்தவரு. அந்தக்காலத்துல 45 நாள் கால்ஷீட். 45 ஆயிரம் அடி பிலிம். இதுதான் பார்மட். 45 ஆயிரம் அடியை யூஸ் பண்ணினா அதுல ௧/3 பங்கு தான் அதாவது 13ஆயிரத்து 500 அடி தான் யூஸ் பண்ணப் போறீங்க.
அப்புறம் பாலா சார் அப்படிப் பேசுனதுக்கு அப்புறம் சரி. போயிட்டு வாங்கன்னு சொல்லி விடுறேன்னாரு. அப்புறம் சிவகுமார் சாருக்கு போன் பண்ணிக் கூப்பிட்டு ‘வாத்தியாரே, இது சரி வராது. நான் எப்படி படம் எடுப்பேன்னு உங்களுக்குத் தெரியும்.
ஒரு மணி நேரம் கூட வேஸ்ட் பண்ண மாட்டேன். கால்ஷீட் படி பக்காவா பிளான் பண்ணி எடுக்குறவன். எனக்கு இந்த டைரக்டர் கூட செட்டாகாத மாதிரி தோணுது. அதனால நமக்குள்ள உறவு கெட்டுப் போயிடக்கூடாது.
இந்த புராஜெக்ட் வேண்டாம்’னு சொல்லி நாசூக்கா அப்பா மறுத்துட்டாரு. அப்பவே பாலா சார் அப்படித் தான் பேசிருக்காரு. புதுசா வந்துருக்கோமே. இது நமக்கு 2வது படம். எப்படியாவது தயாரிப்பாளரை ஒத்துக்க வைக்கணுமே அப்படிங்கற மைன்ட் செட்லாம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாலா, நந்தா படத்தை இயக்கினார். இது தான் அவரது 2வது படம். சூர்யா, லைலா, ராஜ்கிரண், சரவணன், கருணாஸ் உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் இருந்து தான் சூர்யாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் தயாரிப்பாளராக கணேஷ் ரகு, கார்த்திக் ராதாகிருஷ்ணன், வெங்கி நாராயணன், ராஜன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர். அபராஜித் பிலிம்ஸ் என்ற பேனரில் படம் வெளியானது.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…