Connect with us

Flashback

அந்த ஒரு பாட்டுக்காக பாடாய்படுத்திய டிஆர்… தொண்டை போச்சு… முடியாதுன்னு சொன்ன எஸ்பிபி.

ஒரு பாட்டுக்கு 10 மணி நேரம் ஆச்சுதாமே… டிஆர் இப்படியா பண்ணுவாரு? பாவம் எஸ்பிபி.

80 கால கட்டங்களில் டி.ராஜேந்தர் படங்கள் என்றாலே செம மாஸ். பாடல்கள் பட்டையைக் கிளப்பும் ரகம். அப்படி ஒரு படம் தான் மைதிலி என்னைக் காதலி. இந்தப் படத்தில் நானும் உந்தன் உறவைன்னு ஒரு பாடல். டி.ராஜேந்தர் எழுத, எஸ்.பி.பி. பாடிய பாடல். கதாநாயகன் குத்துப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடக்கிறான். அப்போது காதலியைப் பார்க்க வருகிறார்.

அப்போது அவளோ பரதநாட்டியம் ஆடிக் கொண்டு இருக்கிறாள். காதலன் ரத்த வெள்ளத்தில் இறந்து போகிறார். நடனமாடிய காதலி சலங்கைத் தெறித்து விழும்போது அந்தப் பாடல் முடிகிறது. பாடல் சிறப்பாக இருந்ததால் காட்சியை பெரிதாக அக்கால ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்தப் பாடலில் எஸ்பிபி ரத்த வேதனையில் கதாநாயகன் அழுவது போல பாட வேண்டும். அந்தளவு ராகத்தை இழுக்க வேண்டும். அந்த மாதிரி எஸ்பிபி அழகாகப் பாடி இருப்பார். இந்தப் பாடலை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடலின்போது எஸ்பிபியை டி.ராஜேந்தர் ரொம்பவே பாடாய் படுத்தி விட்டாராம்.

இந்தப் பாட்டுக்கு மாலை 2 மணி முதல் இரவு 9 மணி வரை எஸ்பிபி கால்ஷீட் கொடுத்து இருந்தாராம். அவர் முதலில் பாடிக் காட்டுகிறார். டிஆர் அதைக் கேட்கிறார். தெலுங்குப்; பாட்டுன்னா இந்த கால்ஷீட்ல எஸ்பிபி 7 பாடல்கள் பாடி முடிச்சிடுவாராம்.

இளையராஜான்னா 3 பாடல்கள் பாடி விடுவாராம். இப்போ எஸ்பிபி பாடுவதைக் கேட்கிறார். டிஆர் மறுபடியும் பாடுங்கன்னு தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். எஸ்பிபிக்கு திருப்தியா இருக்கு. ஆனா டிஆர்க்கு திருப்தி இல்லை. அதனால மறுபடியும்னு சொல்லிக்கிட்டே இருந்தா எஸ்பிபி கோபப்பட்டு விடக்கூடாதுன்னு ‘என் பாலு இன்னும் நல்லா பாடுவாரே’ன்னு சொல்லி ‘ஐஸ்’ வைப்பாராம் டிஆர்.

இப்படி பாடிக்கிட்டே இருந்த அவர் எப்போ முடிச்சாருன்னு தெரியுமா? நைட் 12 மணியாம். ஒரு கால்ஷீட்டுக்கே 7 பாடல்களைப் பாடியவருக்குக் கால்ஷீட் முடிஞ்சும் பாட முடியல. அந்தளவுக்கு டிஆர் பாடாய் படுத்தி விட்டாராம்.

ஏன்னா ‘இன்னும் ஃபீல் வேணும்’னு சொல்லிச் சொல்லி 10 மணி நேரம் ஒரு பாட்டுக்கு வேலை வாங்கினாராம் டிஆர். இதைப்பார்த்த எஸ்பிபிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் ‘யப்பா என்னய்யா இந்த நேரத்துல நம்மளை இந்தப் பாடு படுத்திட்டாரே…’ன்னு நினைச்சாராம்.

அப்போ கூட கடைசியில சொன்னாராம். ‘இன்னொரு முறை போயிறலாமா பாலு சார்..’னு கேட்டாராம் டிஆர். தொண்டை போச்சு. இதுக்கு மேல பாட முடியாது. அப்படி பாடுறதா இருந்தா காலைல வந்து பாடுறேன்னு சொன்னாராம் எஸ்பிபி.

அதுக்குப் பிறகு தான் டிஆர் சரின்னு சொன்னாராம். ஆனா அந்தப்பாடலைக் கேட்டா ராஜேந்தர் எந்தளவு படுத்தி எடுத்தாரோ அந்தளவு சிறப்பா இருக்கும்;. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Flashback

To Top