More
Categories: Flashback

கோவை சரளா, வடிவேலு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்னு பார்த்தா அதையும் தாண்டிப் போயிடுச்சாமே..!

காலம் மாறிப்போச்சு, வரவு எட்டணா செலவு பத்தணா போன்ற குடும்ப்பாங்கான காமெடிப் படங்களை இயக்குபவர் வி.சேகர். அவர் வடிவேலு, கோவை சரளா பற்றி சொன்ன விஷயம் ஆச்சரியப்பட வைக்கிறது. என்னதான் சொல்றாருன்னு பார்ப்போமா…

ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தில் ஒல்லிக்குச்சா கருப்பா வந்து காமெடி பண்ணியவர் வடிவேலு. தேவர் மகன் படத்தில் கமல் அவருக்கு நடிப்பதற்கு ஏற்ற கதாபாத்திரத்தைக் கொடுத்துக் கொஞ்சம் தூக்கி விட்டார். அதன்பிறகு இயக்குநர் வி.சேகரிடம் வந்து அடிக்கடி வாய்ப்பு கேட்டாராம்.

Advertising
Advertising

ஏற்கனவே எங்கிட்ட கவுண்டமணி, செந்தில், கோவை சரளான்னு நிறைய காமெடியன்கள் இருக்காங்கன்னு சொல்லி இருக்காரு. அதுக்கு கொஞ்சமா சீன் இருந்தாலும் பரவாயில்லை. சம்பளமே தரலன்னாலும் பரவாயில்ல. உங்க படத்துல நடிக்கணும்னு விடாம கேட்டாராம்.

அப்போ அவர் தேவர்மகனில் நடிச்சிக் கொஞ்சம் வெளியே தெரிஞ்சதால வி.சேகரும் வரவு எட்டணா செலவு பத்தணா படத்தில் அவரை நடிக்க வைத்துள்ளார். சூட்டிங் நடக்கும்போது மதுரையில நடந்த சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிசா சொல்வாராம் வடிவேலு.

நாய் குலைச்சா கூட அதை 20 வெர்சன்ல சொல்வாராம். சரி இவங்கிட்ட சரக்கு இருக்குன்னு முடிவு பண்ணி அவரைக் கொஞ்சம் தூக்கி விடலாம்னு வி.சேகர் நினைச்சாராம். அப்படியே இந்தப் படத்துல அவருக்கு ஒரு ஜோடி போடலாம்னு யோசிச்சி கோவை சரளாகிட்ட பேசிருக்காரு. இந்த விஷயம் தெரிஞ்சதும் ‘நான் எவ்ளோ பெரிய நடிகை… என்ன போயி வடிவேலுவுக்கு ஜோடியா போடுறீங்களே’ன்னு சொல்லிட்டாரு கோவைசரளா.

அப்புறம் அவன் பெரிய ஆளா வருவான். நிறைய திறமை இருக்குன்னு சொன்னதும் ஓகே சொன்னாராம். ஆனா கவுண்டமணி, செந்தில் எல்லாரும் ‘வடிவேலு எல்லாம் ஒரு ஆளு… அவனுக்கு ஜோடியாவா நடிக்கப் போறே… அப்படி நடிச்சா அவ்ளோ தான்… நாங்க நீ நடிக்கிற எந்தப் படத்திலும் நடிக்க மாட்டோம்’னு சொல்லி பிளாக்மெயில் பண்ணிருக்காங்க.

உடனே கோவை சரளா பயந்து மறுத்துருக்காங்க. அப்படியும் வி.சேகர் விடாம கோவை சரளாவை சமாதானப்படுத்தி அவருக்கு சம்பளத்தையும் உயர்த்திக் கொடுத்து சம்மதிக்க வைத்து வடிவேலுவுக்கு ஜோடியா போட்டாராம். ஆனால் அந்தக் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகும்னு எதிர்பார்த்தாராம் வி.சேகர்.ஆனா அது அதையும் தாண்டி காதல், கல்யாணம்கற ரேஞ்சுக்குப் போயி தகராறில போயி முடிஞ்சதாம்.

அப்புறம் காலம் மாறிப்போச்சு படத்துக்கு வடிவேலு நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னு கவுண்டமணி சொல்லிட்டாராம். ஆனா வி.சேகர் முதல்லயே வடிவேலுவைப் புக் பண்ணி அட்வான்ஸ் கொடுத்து விட்டாராம். அதனால மாற்ற முடியாதுன்னு சொல்லிட்டாராம்.

அதுக்கு அப்புறம் படத்துல கவுண்டமணியும், செந்திலும் நடிக்க மறுத்துவிட, பாண்டியராஜன், ஆர்.சுந்தரராஜன் ஆகியோரை வைத்து படத்தை எடுத்து முடித்தாராம். படம் நல்லா போனதாம். மற்றபடி கவுண்டமணிக்கும் எனக்கும் பிரச்சனை இல்லை. இப்போ கூட கதை இருந்தா சொல்லுங்க. நடிக்கிறேன்னு தான் சொல்வதாக வி.சேகர் சொல்கிறார்.

Published by
ராம் சுதன்