ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். அவற்றில் ஒன்று தான் தேவர் மகன். 1992ல் பரதன் இயக்கத்தில் வெளியானது.
சிவாஜி கணேசனும் கமலும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றதுமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இவர்களுடன் இணைந்து கௌதமி, ரேவதி, நாசர், காகா ராதாகிருஷ்ணன், மதன்பாபு, தலைவாசல் விஜய், சங்கிலி முருகன், காந்திமதி, எஸ்.என்.லட்சுமி, வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர்.
பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கிராமத்து அழகியலை நேர்த்தியாகப் படம்பிடித்து இருந்தது. அதிலும் அந்த வெள்ளம் வரும் காட்சியும், தேரோட்டமும் நம்மை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. முதலில் படத்திற்கு வைக்கப்பட்ட பெயர் ‘நம்மவர்’ தானாம்.
அதே நேரம் இன்னொரு பெயரும் படத்திற்குப் பரிசீலனையில் இருந்தது. அது சின்னவர். அந்தப் பெயர் எப்படி வந்ததுன்னா எம்ஜிஆர் திரையில் உச்சத்தில் இருந்தபோது அவரை திரையுலகினர் ‘சின்னவர்’ என்றே அழைப்பார்களாம்.
அப்படித்தான் அந்தப் பெயரும் பரிசீலனைக்கு வந்தது. கடைசியில் இளையராஜா தான் படத்திற்கான கதையைக் கேட்டுவிட்டு படத்திற்கு ‘தேவர் மகன்’ என்று டைட்டில் வைக்கச் சொன்னாராம்.
படத்திற்கு இளையராஜா போட்ட அத்தனைப் பாடல்களும் செம ரகங்கள். சாந்து பொட்டு, போற்றிப்பாடடி, வானம் தொட்டு, அட புதியது பிறந்தது, இஞ்சி இடுப்பழகா, மாசறு பொன்னே, மணமகளே, வெட்டறுவா ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
படத்தில் நாசரின் நடிப்பு தத்ரூபமாக இருக்கும். இதே படம் இந்தியிலும் விராசத் என்ற பெயரில் ரீமேக் ஆனது. அனைத்துப் பாடல்களையும் ‘வாலிபக் கவிஞர்’ வாலி எழுதியுள்ளார். இந்தப் படத்திற்கு தமிழக அரசும் 3 விருதுகளைக் கொடுத்துள்ளது.
2 பிலிம்பேர் விருதுகளும் கிடைத்துள்ளது. தேவர் மகன் படத்தில் சிவாஜியின் நடிப்பும் அருமையாக இருக்கும். அவரைப் பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை. அதே போல ரேவதியும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
படத்தில் கமல் போடும் சிலம்புச் சண்டை ரொம்பவே சிறப்பா இருக்கும். இதற்காக அவர் தனியாகப் பயிற்சியும் எடுத்தாராம். படத்திற்கு இளையராஜா போட்ட அத்தனைப் பாடல்களும் செம ரகங்கள். படத்தில் நாசரின் நடிப்பு தத்ரூபமாக இருக்கும்.
இந்தப் படத்தின் கதையை ஒரே வாரத்தில் கமல் எழுதி முடித்தாராம். அவரது திரைக்கதை, வசனம் வெகு அருமையாக இருக்கும். படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது.
Aishwarya rai:…
Amaran: ராஜ்கமல்…
நடிகர் சிம்பு…
Biggboss 8: விஜய்…
தக் லைஃப்…