ரஜினி நடிச்சதிலேயே இந்த படங்கள்தான் அவருக்கு பேவரட்டாம்!.. என்னன்னு தெரியுமா?..

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 74 வயதான போதிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக சினிமாவில் நடித்து இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து வருகின்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் பிப்ரவரி மாதத்துடன் ஷூட்டிங் முடிவடைய இருப்பதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். சமீபத்தில் இப்படத்தின் அனவுன்ஸ்மென்ட் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

170 திரைப்படங்கள்: நடிகர் ரஜினிகாந்த் தற்போது வரை சினிமாவில் 170 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றது. ரஜினிகாந்த் நடித்த இவ்வளவு திரைப்படங்களில் சில படங்கள் மட்டுமே தோல்வி படங்களாக இருந்திருக்கின்றது. அதுவும் ரசிகர்களுக்கு விருப்பத்திற்குரிய படமாகவே அமைந்திருக்கின்றது.
ரஜினிக்கு பிடித்த படங்கள்: ஒவ்வொரு நடிகரும் பல திரைப்படங்களில் நடித்தாலும், அதில் சில திரைப்படங்கள் அவரின் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். அப்படி நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிடித்த படங்களில் ஒன்று 1985 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கிய ஸ்ரீ ராகவேந்திரா திரைப்படம் தான். இந்த திரைப்படம் ரஜினியின் நூறாவது திரைப்படமாக வெளியானது.
இப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றிப் பெறவில்லை என்றாலும் ரஜினிக்கு மிகவும் பிடித்த படங்களில் ராகவேந்திரா திரைப்படமும் ஒன்றாகும். தொடர்ந்து இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த ஆறிலிருந்து அறுவது வரை என்கின்ற திரைப்படமும் நடிகர் ரஜினிக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று.

அதனை தொடர்ந்து இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த முள்ளும் மலரும், ஜானி என்ற திரைப்படம் நடிகர் ரஜினிக்கு மிகவும் பிடிக்குமாம். அது மட்டும் இல்லாமல் தனக்கு பிடித்த இயக்குனர்களில் மகேந்திரனும் ஒருவர் என்று முந்தைய பேட்டிகளில் கூறியிருக்கின்றார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பாட்ஷா மற்றும் எந்திரன் போன்ற திரைப்படங்களும் மிகவும் பிடிக்குமாம். இருப்பினும் நடிகர் ரஜினிகாந்த் மனதிற்கு மிக நெருக்கமான திரைப்படங்கள் என்றால் ஸ்ரீ ராகவேந்திரா, ஆறிலிருந்து அறுபது வரை, ஜானி, முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுகின்றது.