விஜய் சேதுபதி அப்பவே அப்படி!.. நான் சொல்லியும் அவர் கேட்கல!.. சசிக்குமார் பேட்டி...
Vijay sethupathi: விஜய் சேதுபதி எப்படிப்பட்ட நடிகர்? எந்த மாதிரியான கதாபத்திரங்களிலெல்லாம் நடித்து வருகிறார் என்பது ரசிகர்களுக்கு தெரியும். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்கள் வந்தபோதே அவரை ரசிகர்களுக்கு பிடிக்க துவங்கிவிட்டது. ஏனெனில், வழக்கமான கதாநாயகனாக எனக்கு ஜோடி இருக்கணும், 4 பாட்டு இருக்கணும், ஃபைட் இருக்கணும், பன்ச் வசனம் பேசணும் என எந்த ஆசையும் விஜய் சேதுபதிக்கு இல்லை.
ஹீரோ என்றில்லாமல் எந்த மாதிரியான வேடமென்றாலும் நான் நடிக்க தயார் என்பதுதான் விஜய் சேதுபதியின் ரூட்டாக இருந்தது. இதனால், புது முக இயக்குனர்கள் அவர் பக்கம் போனார்கள். சில படங்களில் ஹீரோவாக நடித்த அவர் அப்படியே மாறி காமெடி கலந்த வில்லனாக சூது கவ்வும் படத்தில் நடித்தார்.
எந்த இமேஜுக்குள்ளும் அவர் சிக்கவில்லை. சரியாக சொன்னால் சிக்க விரும்ப வில்லை. ஆண்டவன் கட்டளை, சூப்பர் டீலக்ஸ் என வெரைட்டியான வேடங்களில் நடித்தார். அதுவும் தமிழ் சினிமா நடிகர்களில் திருநங்கையாக நடிக்கும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டுமே இருந்தது.
அப்படியே ஆளே மாறி வில்லனாக நடிக்க துவங்கினார். மாஸ்டர், விக்ரம் மற்றும் ஜவான் ஆகிய படங்களில் அவர் எப்படிப்பட்ட டெரர் வில்லனாக வந்தார் என்பது ரசிகர்களுக்கு தெரியும். எப்படிப்பட்ட வேடம் என்றாலும் விஜய் சேதுபதி நடிப்பார் என்பதால் அவரை தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இருந்தெல்லாம் கூப்பிடுகிறார்கள்.
விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க துவங்கியது மாஸ்டர் படத்திலிருந்துதான் என பலரும் நினைப்பார்கள். ஆனால், நடிக்க வந்த புதிதிலேயே வில்லனாக கலக்கி இருக்கிறார். சசிக்குமார் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த சுந்தரபாண்டியன் படத்தில் அவர்தான் வில்லனாக வருவார்.
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சசிக்குமார் ‘சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது முடிவானது. அப்போது அவர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து கொண்டிருந்தார். ஹீரோவாக நடிப்பவரை வில்லனாக்க வேண்டாம் என சொன்னேன். ஆனால், அவரோ ‘நான் நடிக்கிறேன் சார்’ என சொன்னார். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்த இமேஜிக்குள்ளும் சிக்கக் கூடாது.. எல்லா வேடத்திலும் நடிக்க வேண்டும் என்பதில் அப்போதே அவர் உறுதியாக இருந்தார்’ என சசிக்குமார் சொல்லி இருக்கிறார்.