சிகரெட் பிடிக்கும் காட்சியில் புதுமை செய்த பாக்கியராஜ்... அப்பவே வேற லெவல் தான்!

சுவரில்லாத சித்திரங்கள் படம் தான் கே.பாக்கியராஜ் இயக்கிய முதல் படம். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் பாக்கியராஜின் தந்தை கல்லாப்பெட்டி சிங்காரம். ஒருநாள் அவர் வீட்டில் இல்லாதபோது சிகரெட் பிடித்தபடி எதையோ எழுதிக்கொண்டு இருப்பார் பாக்கியராஜ்.

அந்த நேரம் பார்த்து அவர் தந்தையான கல்லாப்பெட்டி சிங்காரம் உள்ளே வந்துவிடுவார். அப்பாவுக்குத் தான் சிகரெட் பிடிப்பது தெரிந்துவிடக்கூடாதேன்னு சிகரெட்டை மறைத்து வைப்பார் பாக்கியராஜ். இதுபோன்ற காட்சி அமைத்தால் எல்லா இயக்குனர்களும் எப்படி அமைப்பார்கள்? 'ஏன்டா இப்படி சிகரெட் பிடிச்சிக் கெட்டுப்போற'ன்னு சொல்வாரு.

'எப்போ இருந்து இந்தக் கெட்டப்பழக்கம்'னு கேட்பாரு. இந்த இரண்டு அப்பா மகன் மாதிரி இல்லாம வேறு மாதிரி இருந்தா 'சிகரெட்டைப் பின்னால மறைச்சிக்கிட்டா தெரியாதுன்னு நினைச்சியா? பின்னால தான் புகை வருதுல்ல' என்று கேட்கிற மாதிரி காட்சி அமைப்பார்.

ஆனா பாக்கியராஜ் இது எது மாதிரியும் காட்சியை அமைக்கவில்லை. அப்பாவைப் பார்த்து சிகரெட்டை பாக்கியராஜ் மறைச்ச உடனேயே அவருடைய அப்பாவான கல்லாப்பெட்டி சிங்காரம் 'ஏன்டா அழகு இந்த சிகரெட் அஞ்சு பைசா பெறுமா?


அந்த அஞ்சு பைசா பெறாத சிகரெட்டை எங்கே நான் கேட்டுருவேனோன்னு பின்னாடி ஒளிச்சி வைக்கிறீயே... எதிர்காலத்துல ஒங்க அப்பனுக்கு என்னடா செய்யப்போற'ன்னு விக்கி விக்கி அழத் தொடங்கி விடுவார்.

பாக்கியராஜ் அந்தக் காலத்துல நடிக்கும்போது ஒரு பக்கம் கமல், இன்னொரு பக்கம் ரஜினி, விஜயகாந்த், கார்த்திக்னு பலரும் பீக்ல இருந்தாங்க. அப்படி இருந்தாலும் அவர்களை மாதிரி நடிக்காம தனக்கென தனி பாணியை வகுத்து போட்டி போட்டு நடித்தவர் பாக்கியராஜ். அதுக்குக் காரணம் அவர் அமைத்த காட்சி அமைப்புகளும், கதையும் தான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it