யுவன் – மதன் கார்க்கி இணைந்த முதல் படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டு இருக்கா? அந்த படத்தில் இதை நோட் பண்ணிருக்கீங்களா?

0
95

இசைராஜா இளையராஜவும் கவிஞர் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, எம்.எஸ்.வி – கண்ணதாசன், எம்.எஸ்.வி – வாலி காம்போவுக்குப் பின் தமிழ் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி இது. பின்னாட்களில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட சின்ன கருத்து வேறுபாடால் இந்த காம்போ பிரிந்தது.

1980 தொடங்கி 7 ஆண்டுகள் திரையிசையில் பல சாதனைகளைப் படைத்த இந்த ஜோடி பிரிய முதல் காரணம், பாடல் ஒலிப்பதிவுக்கு வைரமுத்து சரியான நேரத்துக்கு வரத் தவறியதுதான் என்கிறார்கள். அங்கிருந்து தொடங்கிய கசப்பு, ஒரு சில பாடல்களில் தலையிட்டு இந்த வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா சொன்னதால் அதிகரித்ததாம். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இளையராஜாவோடு பணியாற்றாவிட்டாலும் அவரது மகனும் இசையமைப்பாளருமான யுவனோடு பல படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார் வைரமுத்து. அதேபோல்தான், வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கியும்… இந்த காம்போ முதன்முதலில் இணைந்த பாடலில் ஒரு மேஜிக்கையும் மதன் கார்க்கி நிகழ்த்தியிருப்பார்.

யுவனின் 100-வது படம் வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த பிரியாணி படம். இதில் `பாம் பாம் பெண்ணே’ என்கிற ஒரு பாட்டை மதன் கார்க்கி எழுதினார். பாடல் பதிவுக்குப் பிறகுதான் வெங்கட் பிரபு ஒரு விஷயத்தை கண்டுபிடித்திருக்கிறார். அந்தப் பாடலில், “பொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே, ஏதேதோ எண்ணம் எல்லாம் மீண்டும் பூக்கின்றதே” என மதன் கார்க்கி வரிகள் எழுதியிருப்பார்.

இளையராஜா – வைரமுத்து இணைந்து வேலை பார்த்த முதல் பாடல் `பொன்மாலை பொழுது’, அவங்க கடைசியா வேலை பார்த்த பாட்டு `ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்’. இந்த இரண்டு பாடல்களையும் நினைவுபடுத்தும் விதமாகத்தான் இந்த வரிகளை மதன் கார்க்கி எழுதியிருப்பார். யுவன் – மதன் கார்க்கி சேர்ந்து பணியாற்றிய முதல் பாடல் இதுதான்.

google news