சிவாஜியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா..! கிளாசிக் படத்தை மிஸ் பண்ணிட்டாரே..!

by sankaran |   ( Updated:2024-10-18 12:31:09  )
Jayalalitha, sivaji
X

சிவாஜி படங்களில் இன்று வரை பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற வகையில் எத்தனையோ படங்கள் இருக்கு. ஆனால் அவற்றில் ஒரு சில படங்கள் சூப்பர் டூப்பர்ஹிட்டாக இருக்கும்.

அதைத்தான் மெருகேற்றி டிஜிட்டல் பிரிண்டாக வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட படங்களில் கர்ணன், வசந்தமாளிகை என இரண்டும் மீண்டும் திரைக்கு வந்து சக்கை போடு போட்டன. அவற்றில் ஒன்று தான் வசந்தமாளிகை.

எப்பவுமே 'ஓல்டு இஸ் கோல்டு' தான். சிவாஜியின் தத்ரூபமான நடிப்பு பார்க்கும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் 100 சதவீதம் பொருந்திப் போய்விடுவார். இந்தப் படங்களைத் தான் மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள். அப்படி ஒரு படம் தான் வசந்த மாளிகை. இது வசூலில் சக்கை போடு போட்டது. அந்தக் கால இளைஞர்களுக்கு இது தான் காதல் காவியம்.


சிவாஜி, வாணிஸ்ரீ காம்போ நல்லா ஒர்க் அவுட் ஆனது. இந்தப் படம் முதலில் தெலுங்கு பதிப்பாக வந்தது. நாகேஸ்வர ராவ், வாணிஸ்ரீ நடித்து பிரேம நகர் என்ற பெயரில் டி.ராமநாயுடு தயாரிப்பில் வெளியானது. அதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் அவரே தயாரிக்க வெளியானது. இந்தப் படததைத் தெலுங்கில் இயக்கிய கே.எஸ்.பிரகாஷ் ராவே தமிழிலும் இயக்கினார்.

சிவாஜி, வாணிஸ்ரீ காம்போவுடன் பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், ரங்காராவ், ஸ்ரீகாந்த், செந்தாமரை உள்பட பலர் நடித்துள்ளனர். வழக்கமாக ஸ்ரீதர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் வின்சென்ட் தான் இந்தப் படத்திற்குப் பணியாற்றினார். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார்.

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், குடிமகனே, மயக்கமென்ன, இரண்டு மனம் வேண்டும், யாருக்காக, கலைமகள் என பாடல்கள் எல்லாமே 'நச்' ரகங்கள். கவியரசர் கண்ணதாசன் எழுதியவை. இந்தப் படத்திற்காக உருவான கண்ணாடி மாளிகை செட்டை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.

படத்தில் முதலில் கதாநாயகியாக ஜெயலலிதா தான் நடிப்பதாக இருந்ததாம். அந்த நேரத்தில் அவரது தாய் சந்தியா காலமாகி விட்டார். அதனால் அவரால் அப்போது நடிக்க முடியாமல் போனது.

இந்தப் படம் 1972ல் வெளியானது. 271 நாள்களைக் கடந்து ஓடியது. இலங்கையில் 1 வருடத்துக்கும் மேலாக ஓடியதாம். இந்தப் படத்தில் முதலில் ஹீரோ கிளைமாக்ஸில் இறந்து விடுவது போல வைத்தார்களாம். அதன்பிறகு உயிர் பிழைப்பது போல மாற்றி விட்டார்களாம்.

Next Story