அல்டிமேட் ஸ்டார் அஜீத்துன்னு சும்மாவா சொன்னாங்க... நாள் முழுக்க அசராம நடிச்சிருக்காரே..!
தமிழ்த்திரை உலகில் பல ஆச்சரியமான சம்பவங்கள் நமக்குத் தெரியாமலேயே நடந்து வருகின்றது. அதன் பலன் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. அதற்குப் பின்னால் உள்ள கடின உழைப்பு தெரிவதில்லை.
ஒரு படத்தைப் பார்த்து விட்டு நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்றோம். இல்லாவிட்டால் நல்லா இல்லன்னு சொல்றோம். ஆனால் அதற்குப் பின்னாடி உள்ள கடின உழைப்பைப் பற்றி நாம் யோசிக்கிறது இல்லை.
பெரும்பாலான படங்களில் கஷ்டப்பட்டு காட்சியை எடுத்து இருந்தும் எங்கோ ஒரு இடத்தில் சொதப்பி விடுவதால் படம் தோல்வி அடைந்து விடுகிறது. சில படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கிறது. இந்த இரு வகைப் படங்களிலும் கடின உழைப்பு இருக்கத் தான் செய்கிறது.
அதை என்னன்னு நாம் சொல்வதை விட சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால் தான் நல்லாருக்கும். அந்த வகையில் அல்டிமேட் ஸ்டார் அஜீத் பற்றிய ஒரு சுவையான தகவலைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
வேலை இல்லாம உட்கார்ந்துருந்தா நல்ல 8 மணி நேரம் தூங்கினாலும் ஷாட்டுக்குப் போகும்போது தூக்கம் வரும். அதே நேரத்துல அந்த வேலைல கவனம் இருந்தா தூக்கம் வராது. ஒரு ஆக்டருக்கு ஷாட் ரெடின்னு சொன்னா தான் அதை இப்படி பண்ணலாமா அப்படி பண்ணலாமான்னு ஒரு இது வரும்.
ஒரு டைரக்டருக்கு 24 கிராப்ட்டுன்னு சொல்றாங்களே அதை விட எக்ஸ்ட்ரா கிராப்ட் எல்லாம் இருக்கு. ஒவ்வொரு நாளும் கரெக்டா ஒர்க் போயிக்கிட்டு இருக்கா? அப்படின்னு பல விதமான சிந்தனைகள் ஓடிக்கிட்டே இருக்கும். அப்போ படுத்தா கூட தூக்கம் வராது.
நானாவது பரவாயில்ல. அஜீத் வந்து டிரிபிள் ரோல். அவர் முகம் எல்லாம் நல்லா தெரியும். ஆடியன்ஸ் அதைத் தானே பார்க்குறாங்க. அவரே தூக்கம் இல்லாம ஏழு நாளும் 24 மணி நேரமும் ஒர்க் பண்ணியிருக்காரு. அப்படி இருக்கும்போது நம்ம எப்படி? நம்ம தூக்கம் இல்லாம பண்ணினது தான் அந்த வரலாறு எல்லாம். நம்ம கான்சன்ட்ரேஷன் பண்ணினாலே எல்லாமே வந்துடும் என்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.
2006ல் அஜீத் முற்றிலும் மாறுபட்ட 3 வேடங்களில் நடித்த படம் வரலாறு. கே.எஸ்.ரவிக்குமார் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.