நடிகை ஆடும்போது எம்ஜிஆர் கவனித்த அந்த விஷயம்...! இது அல்லவா ஹீரோவின் கண்ணியம்!

குடியிருந்த கோயில் படத்துடைய பாடல். ஆலங்குடி சோமு எழுதினது. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' பாடல். கே.சங்கர் இயக்கியது. 1966ல ரிலீஸ். இன்னைக்கும் அந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே இல்லை.

அந்தப் பாட்டு ரெக்கார்டிங் ஆகிடுச்சு. டைரக்டர் இந்தப் பாட்டை பஞ்சாபி டான்ஸா வச்சா எப்படி இருக்கும்னு கேட்கிறார். எம்ஜிஆர் முதலில் தயங்கினாலும் பிறகு சம்மதித்து அதற்காக ஒரு வாரம் பயிற்சி எடுக்கிறார். ராஜஸ்ரீயும், எம்ஜிஆரும் ஆடுறாங்க. ஒரு ஷாட்ல அப்படியே ராஜஸ்ரீ சுத்திட்டு வந்து அப்படியே உட்கார்ற சீன். அப்போ மானிட்டர் கிடையாது. சிங்கிள் ஷாட். அதுக்கு 10 முறை ரிகர்சல் பார்க்கப்படுது. ஆடிக்கிட்டே வந்து சுத்தி உட்காரணும்.


யூனிட்டே கைதட்டுறாங்க. ஆனா எம்ஜிஆர் மட்டும் 'ஒன்ஸ்மோர்' எடுக்கச் சொல்றாரு. மறுபடியும் ஆட அப்பவும் எம்ஜிஆர் 'ஒன்ஸ்மோர்' சொல்றாரு. 3வதாக ஆடும்போது 'டேக் ஓகே'ன்னு எம்ஜிஆர் சொல்றாரு. டைரக்டரும், ராஜஸ்ரீயும் 'ஒன்ஸ்மோர் 2 தடவை ஏன் கேட்டீங்க'ன்னு தங்களோட சந்தேகத்தை ஆவலோடு எம்ஜிஆரிடம் போய் கேட்குறாங்க. 'நீ சுத்திட்டு வந்து ஆடும்போது உன் உள்ளாடை தெரியுதும்மா. நீ நல்லா ஆடிட்டே. அடுத்தும் நல்லா பண்ணுவே.

நீ முதல்ல ஆடுன மாதிரி இருந்தா அதை எடுத்துருப்பாங்க. அப்புறம் எடிட்டிங்ல அதைத் தூக்கிடுவாங்க. அதை ஆடியன்ஸ் யாரும் பார்க்கல. நீ நல்லா ஆடுறதனால அடுத்த டேக்ல ஓகே வானது'ன்னு எம்ஜிஆர் சொல்றாரு. இதுதாங்க நடிகரின் கண்ணியம். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆரைப் பொறுத்தவரை அவர் ஒரு திறமையான கலைஞர். சினிமாவில் உள்ள அத்தனை விஷயங்களையும் விரல் நுனியில் வைத்து இருந்தவர். இசை ஞானம் உள்ளவர். கேமரா ஆங்கிள் பார்ப்பதில் வல்லவர். அப்புறம் அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதற்கு அவர் இயக்கிய நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் என்ற அந்த இரண்டு படங்களே சாட்சி. அப்படி திறமை வாய்ந்தவராக இருந்ததால் தான் இந்தப் பாடலில் யாருமே கவனிக்காமல் இருந்த மாபெரும் தவறை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.

Related Articles
Next Story
Share it