அந்த பிரபலத்தை பற்றி விஜயகாந்த் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண முரளி.. அப்பவே இந்த பிரச்சனை இருந்திருக்கா?..

தமிழ் சினிமாவில் 90'ஸ் காலகட்டத்தில் வெளிவந்த பல காமெடி திரைப்படங்கள் இன்றளவும் ஃபேமஸாக இருந்து வருகின்றது. இந்த திரைப்படங்கள் அனைத்துமே டிவிகளில் போடும்போது மக்கள் ஆவலுடன் கண்டுகளித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் சுந்தரா டிராவல்ஸ். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை காமெடியில் புகுந்து விளையாடி இருப்பார்கள்.
இந்த திரைப்படம் மலையாள திரைப்படமான 'ஈ பறக்கும் தளிக்கா' என்கின்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் தமிழில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் முரளி, வடிவேலு, ராதா, இயக்குனர் வாசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் அசோகன் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்திற்கு பரணி இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தங்கராஜ் தயாரித்திருந்தார். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஒரு பேருந்து மற்றும் அதை சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து மிகச் சிறப்பாக கொண்டு சென்றிருப்பார்கள். படம் வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து தயாரிப்பாளர் தங்கராஜ் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'இந்த படத்தை எடுத்து முடித்த பிறகு எனக்கும் முரளிக்கும் இடையே சில மனஸ்தாபம் ஏற்பட்டது/ அதாவது படத்தை எடுத்து முடித்தவுடன் அதன் ஃபர்ஸ்ட் காப்பியை தனக்கு போட்டு காட்டும்படி முரளி கூறியிருந்தார்.
ஆனால் நான் உங்களுக்கு சம்பளம் கொடுத்தாச்சு அல்லவா அது எல்லாம் உங்களுக்கு எதற்கு என்று ஃபர்ஸ்ட் காப்பியை போட்டு காட்ட முடியாது என்று கூறிவிட்டேன். அதன் பிறகு முரளி நேராக சென்று விஜயகாந்த் அவர்களிடம் கம்ப்ளைன்ட் பண்ணி விட்டார். நான் எப்போதும் நடிகர் சங்கத்தில் தான் அதிகமாக இருப்பேன். அங்கு தான் விஜயகாந்த் சார் இருப்பார்.
அவருடன் தான் பெரும்பாலான நேரங்களை செலவிடுவேன். ஒரு நாள் அவரை பார்க்க செல்லும் போது நடிகர் முரளி அங்கு இருந்தார். என்னை பார்த்ததும் உங்கள் மீது நான் மிகுந்த கோபத்தில் இருக்கின்றேன் என்றார், விஜயகாந்த் உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை அவர் படத்தை போட்டு காட்ட தானே சொன்னார் காட்டி விட வேண்டியது தானே என்று கூறினார்.

பிறகு விஜயகாந்த் சார் வார்த்தைக்காக படத்தை போட்டு காட்டினேன். நான், முரளி, விஜயகாந்த் சார் மூவரும் அமர்ந்து அந்த திரைப்படத்தை பார்த்தோம். படத்தை பார்த்து முடித்து விட்டு விஜயகாந்த் அவர்கள் மிகவும் பாராட்டினார்கள்' என்று கூறியிருந்தார். தற்போது தான் படங்களை எடுத்து முடித்த பிறகு இயக்குனர் தயாரிப்பாளருக்கு படத்தை போட்டு காட்ட மறுக்கின்றார் என்றெல்லாம் பிரச்சனை வருகின்றது என்று பார்த்தால் அப்போது இந்த பிரச்சனை எல்லாம் இருந்திருக்கின்றது.