ஜெயிலர்2ல் மட்டுமில்ல… மொத்த படமும் ரஜினிக்கு டூப் போட்ட ’சூப்பர்ஹிட்’ படம்… இது தெரியாம போச்சே?

by Akhilan |   ( Updated:2025-01-17 15:30:47  )
rajinikanth
X

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஜெயிலர் 2 படத்தின் புரோமோ வீடியோவிற்கு டூப் போட்டதாக சர்ச்சை கிளம்பிய நிலையில் ஒரு மொத்த படத்துக்கே டூப் போட்ட சம்பவம் கசிந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் தயாராகி இருக்கிறது. தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வீடியோ வெளியானது. ஆனால் அதில் ஒரு காட்சியில் தான் ரஜினிகாந்தின் முகம் காட்டப்படும்.

மற்ற காட்சிகளில் தலை, கால் எனக் காட்டப்பட இது டூப் என பலரும் விமர்சிக்க தொடங்கினர். இதை தொடர்ந்து இன்று ஷூட்டிங் வீடியோக்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு சமாளித்து இருக்கிறது. ஆனால் ரஜினிகாந்தின் ஒரு மொத்த படமுமே டூப் போட்டே எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

இதுகுறித்து மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா ஒரு வீடியோ தெரிவித்துள்ளார். அவர் இயக்கிய திரைப்படம் ஊர்காவலன். இப்படத்தினை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. ரஜினிகாந்த், ராதிகா, பாண்டியன், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் மைசூரில் 46 நாட்களுக்கு படமாக்கப்பட்டதாம். ரஜினிகாந்திடம் குறிப்பிட்ட ஷெட்யூலுக்கு மட்டும் 12 நாட்கள் கால்ஷூட் கேட்டு இருக்கின்றனர். ஆனால் அந்த படத்தில் அவருக்கு குதிரை ஓட்ட நிறைய காட்சிகள் இருந்ததாம்.

ஆனால் ரஜினிகாந்த் என்னுடைய சொந்த தயாரிப்பில் எடுத்த படத்தில் நான் குதிரை ஏறி நடிக்கும் போது அது என்னை தள்ளி விட்டது. அதனால் குதிரை ஏறி நடிக்கும் காட்சிகளை டூப் போட்டு எடுத்துக்கோங்க. குளோசப் காட்சிகளில் மட்டும் நான் நடிக்கிறேன் எனக் கூறிவிட்டாராம்.

இதனால் 11 நாட்கள் டூப் மட்டுமே போட்டு மொத்த படமும் ஷூட் செய்யப்பட்ட ரஜினிகாந்த் கடைசி நாளில் வந்து நான்கு மணி நேரத்தில் வந்து அந்த படத்தினை நடித்து முடித்து கொடுத்துவிட்டாராம். இருந்தும் பாடல்கள் எல்லாம் சங்கர் கணேஷ் இசையில் செம ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story