தேவாவின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கலாமா..! மனுஷனை என்னா பாடு படுத்திருக்காங்கன்னு பாருங்க..!
தேவா... இந்த இரண்டெழுத்து மியூசிக் டைரக்டர் காதல் கோட்டை வந்த நேரத்தில் தமிழ்சினிமாவுல தவிர்க்க முடியாத இசை அமைப்பாளர்களில் ஒருவர். முக்கியமாக கானா பாடல் என்றால் அசத்தி விடுவார். இவரது குரலும் அத்தகைய பாடலுக்கு கனகச்சிதமாகப் பொருந்திப் போகும். விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி என்ற ஒரு பாடலே போதும். இவரது சிறப்பை எடுத்துச் சொல்ல.
ரஜினிக்கு பாட்ஷா, அண்ணாமலை போன்ற சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் திரை உலகை மட்டுமல்லாமல் இந்தியத்திரை உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தால். சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு டைட்டில் கார்டு மியூசிக் போட்டு தெறிக்க விட்டார். அன்று முதல் ரஜினியின் படங்களில் தவறாமல் இடம்பெற்று வருகிறது. தீப்பொறி பறக்கும் வகையில் இவர் இசைக்கும் மாஸ் படங்கள் நம்மையே அசர வைத்து விடுகின்றன.
இப்படி எல்லாம் இசை அமைக்க முடியுமா என்று. ஆனா என்ன காரணத்தாலோ குறுகிய காலம் மட்டுமே தமிழ்சினிமாவில் நிலைத்தார். அதற்குப் பிறகு வந்த பல புது இசை அமைப்பாளர்கள் இவரது இடத்தைக் காலி செய்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
எல்லாமே கணினிமயமாகி விட்டது. அதனால் மியூசிக்கும் தற்போது ஒரே இரைச்சல் தான் வருகிறதே தவிர இதமான பாடல்கள் வருவதில்லை. தேவாவின் இசை ஏன் பிடிக்கவில்லையா என்றால் ரொம்பவே பிடிக்கும்னு தான் சொல்றாங்க. அந்த வகையில் தேவா என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
சினிமாவுல நமக்கு வரும் வாய்ப்பை தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருப்பாங்க. எனக்கும் அந்த மாதிரி நிறைய நடந்துருக்கு. வச்சு செய்வாங்க. ஆரம்ப கால கட்டத்தில் ஒரு படத்திற்காக மெலடியா மியூசிக் போட்டேன். அந்தப் படத்தோட புரொடியூசர் இல்லப்பா என்னோட ரசிகர்களுக்கு எல்லாம் டப்பாங்குத்து தான் பிடிக்கும் என்று சொன்னார்.
உடனே நானும் அந்த மாதிரி ஒரு பாட்டை போட்டேன். அவருக்கும் பிடித்துப் போய் ஓகே சொல்லிவிட்டார். ஒரு நாலு நாளுக்கு அப்புறம் அங்கே போய் பார்த்தா நான் கமிட்டான படத்தோட கம்போசிங் நடந்துட்டு இருக்கும். எப்படியோ பேசி வாய்ப்பு வாங்கிட்டாங்க. இப்படி நிறைய நடக்கும். இதை நான் சிரிச்சிக்கிட்டே சொல்றேன். நம்ம இந்த இடத்துக்கு வந்ததால காமெடியா இருக்கு. ஆனா அந்த வலி இருக்கே என்கிறார் தேவா நிதானமாக.