தெய்வமகன், திரிசூலம்..... இவ்ளோ வெரைட்டியைக் காட்டியிருக்காரா? 'நடிப்பின் இமயம்'னு சும்மாவா சொன்னாங்க..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் நடித்த படங்களில் தெய்வமகன், திரிசூலம் முக்கியமானவை. இந்தப் படங்களுக்கு இடையே என்னென்ன ஒற்றுமைகள் இருக்குன்னு பாருங்க. அசந்து போயிடுவீங்க. பார்க்கலாமா...

திரிசூலம், தெய்வமகன் இரண்மே சிவாஜி படம். மூன்று வேடங்கள். அவற்றில் தெய்வமகன் கருப்பு, வெள்ளை படம். திரிசூலம் கலர் படம். இரண்டு படங்களிலும் சிவாஜிக்கு 3 வேடம் எப்படி என்றால் ஒரு அப்பா, 2 பையன்கள்.


தெய்வமகனில் மகன்களாக நடிக்கும் இருவரும் இரட்டைக்குழந்தைகள் கிடையாது. ஆனால் திரிசூலத்தில் இரட்டைக் குழந்தைகள். தெய்வமகனில் மூத்தமகனாக இருக்கும் கண்ணன் பாதி முகம் வெந்து போய் இருப்பார். அமைதியானவர். ஆனால் கோபம் வந்தால் எமோஷனலாகி விடுவார்.

திரிசூலத்தில் மூத்த மகன் சாந்தமான கேரக்டர். தெய்வமகனில் இளையமகன் நகத்தைக் கடிக்கும் வெகுளியான கேரக்டர். திரிசூலத்தில் இளையமகன் வெகுளி கிடையாது. ஆனால் குறுகுறுப்பு, துருதுருப்பு மிக்கவர்.

தெய்வமகன் படத்தில் அப்பா சிவாஜி, அம்மா பண்டரிபாய். நகத்தைக் கடிக்கும் சிவாஜி அம்மா, அப்பா கூடவே இருப்பார். திரிசூலத்தில் அப்பா சிவாஜி, அம்மா கே.ஆர்.விஜயா. அவங்க கூட மூத்த மகன் சங்கர் சிவாஜி இருப்பாரு.

தெய்வமகன் படத்துல அப்பா சிவாஜிக்குப் பாட்டு கிடையாது. அண்ணன் சிவாஜிக்குப் பாட்டு உண்டு. இளைய மகன் சிவாஜிக்கும் பாட்டு உண்டு. மூத்த மகன் சிவாஜிக்கு கேட்டதும் கொடுத்தவனே பாடல் சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தில் எல்லா சிவாஜிக்கும் டிஎம்எஸ் பாடியுள்ளார். திரிசூலத்தில் மலர் கொடுத்தேன் பாடலை டிஎம்எஸ் பாடியுள்ளார். திருமாலின் திருமார்பில் பாடலை ஜேசுதாஸ் பாடியுள்ளார். தம்பி சிவாஜிக்கு எஸ்பிபி பாடியுள்ளார்.

தெய்வமகன், திரிசூலம் இரு படங்களுக்குமே எம்எஸ்வி தான் இசை அமைப்பாளர். கண்ணதாசன் தான் பாடல்களை எழுதியுள்ளார். இருபடங்களிலும் சிவாஜியின் நடிப்பு உச்சத்தைத் தொட்டது. இரு படங்களிலும் வில்லன் நம்பியார் தான்.

இரு படங்களிலும் சிவாஜி அப்பா கேரக்டரில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார். அதே போல மூத்த மகன், இளையமகன் கேரக்டரிலும் இருபடங்களிலுமே வித்தியாசம் காட்டி இருப்பார் சிவாஜி.

தெய்வமகன் சூப்பர்ஹிட். வசூலில் சாதனை. பல ஆண்டுகள் கழித்து திரிசூலமும் சூப்பர் ஹிட். வசூலில் சாதனை. பலே பாண்டியாவிலும் சிவாஜி 3 கேரக்டர்கள் தான். பலே பாண்டியாவில் சிவாஜி 3 வேடம். அப்பாவி, ரவுடி, விஞ்ஞானி. அதே மாதிரி எம்ஆர்.ராதாவும் 2 வேடம். இருவரும் நடிப்பில் பின்னிப் பெடல் எடுத்திருப்பார்கள்.சிவாஜியைப் பொருத்தவரை எத்தனை படங்கள் நடித்து இருந்தாலும் அத்தனையிலும் தனது நடிப்பில் வித்தியாசம் காட்டி இருப்பார் என்பது தான் ஆச்சரியம்.

Related Articles
Next Story
Share it