நஷ்டத்தால் துவண்ட தயாரிப்பாளருக்கு வாழ்வு கொடுத்த வசந்தமாளிகை... யாரு அந்த பிரபலம்?
சென்னை பாடியில் உள்ள சிவசக்தி திரையரங்கின் உரிமையாளர் சிவசக்தி பாண்டியன். இவர் திரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக மாறியவர். காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், வெற்றிக் கொடி கட்டு போன்ற படங்களைத் தயாரித்தவர். திரைப்படத் தயாரிப்பாளராக மாறுவதற்கு முன்பு சினிமாப் படங்களை எடுத்து விநியோகம் செய்தார். இவர் நடிகர் திலகத்தின் 100 படங்களை வாங்கி விநியோகம் செய்துள்ளார்.
2010ம் ஆண்டு சிவாஜியின் நினைவு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிவசக்தி பாண்டியன் பேசினார். நான் இன்று இந்த நிலைமைக்கு இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நடிகர் திலகம்தான். ஒரு படம் எடுத்து மிகுந்த நஷ்டம் அடைந்தபோது அவருடைய வீட்டில் சினிமா துறையே வேண்டாம் என்றார்களாம். பின்பு பிழைப்பு தேடி திருவொற்றியூரில் தினக்கூலி வேலை செய்து கஷ்டப்பட்டதையும் நினைவுகூர்கிறார்.
நண்பர் ஒருவர் காலை காட்சி மட்டும் விநியோகம் செய்யச் சொல்லி அறிவுறுத்தவே விநியோகஸ்தரிடம் 250 ரூபாய் கொடுத்து அந்தப் படத்தை வாங்கிவிடலாம் என்றெண்ணிக் கேட்டுள்ளார். இதற்கு அட்வான்ஸ் மட்டுமே 1000 ரூபாய் கொடுக்கத் தயாராக இருக்காங்கன்னு அவர் சொல்ல அழாத குறையாகக் கேட்டு வாங்கினாராம் சிவசக்தி பாண்டியன். அது தான் வசந்த மாளிகை.
வில்லிவாக்கம் ராயல் தியேட்டரில் படத்தைத் திரையிட்டுள்ளார். அது 7 நாள்களில் 7 காட்சிகளும் ஹவுஸ்புல். அதன் மூலம் தான் மீண்டு வந்ததாக சொன்னார். அந்தப் படம் தான் வசந்தமாளிகை. அதன்பிறகு புதிய பறவை, ஆண்டவன் கட்டளை என பல படங்களைத் திரையிட்டேன். வெள்ளை ரோஜா, முதல் மரியாதை, படையப்பா படங்கள் பெரும் வெற்றியைக் கொடுத்தன.
தனது வெற்றிக்குக் காரணம் நடிகர் திலகம் தான் என்ற சிவசக்தி பாண்டியன், அவரால் எத்தனை தயாரிப்பாளர்கள் வாழ்ந்தார்கள், எத்தனை பேருக்கு வாழ்வு கிடைத்தது என்பதைப் பார்த்தால் பிரமிப்பு உண்டாகும் என்றார். இன்று அதுபோல தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யும் நடிகர்கள் யாருமே இல்லை என்றும் சொன்னாராம். காதல் கோட்டை படத்தின் இந்தி ரீமேக்ஸ் ரைட்ஸை வாங்கியவர் ராம்குமார் என்றார்.