ஜெயலலிதாவிடம் கிஸ் கேட்ட சந்திரபாபு! அடுத்து என்ன நடந்திருக்கும்னு யோசிக்க முடியுதா?

எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்திரபாபு. அவர் ஒரு அருமையான நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி அவருடைய சொந்த வாழ்க்கை மிகவும் சோகம் நிறைந்தது. திருமணம் ஆன அன்று முதல் இரவில் அவர் மனைவி வேறு ஒருவரை விரும்புவதாக கூற அன்று இரவே அவள் காதலனுடன் அனுப்பி வைத்த ஒரு அற்புதமான மனிதர் சந்திரபாபு.

அதிலிருந்து தான் அவர் குடிக்கு அடிமையானார் என்று பல பேர் கூறி வந்தார்கள். ஆனால் அவரைப் பற்றி அவருடன் கூடவே இருந்த உதவியாளர் என்றே சொல்லலாம். இலக்கியத்தில் கைதேர்ந்தவர். புராண நூல்களை அதிகம் படித்தவர். ஆங்கில நூல்களையும் அதிகம் தெரிந்தவர் .அவர்தான் ஸ்ரீ கவி.

சந்திரபாபு உடன் மிகவும் நெருக்கமானவர். அவர் சந்திரபாபுவை பற்றி கூறும்போது 'சந்திரபாபு குடிகாரனும் கிடையாது. பெண் ஆசை பிடித்தவரும் கிடையாது. சந்திரபாபுவால் ஒரு பெண் பாதிக்கப்பட்டார் என எந்த பெண்ணையாவது வந்து சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர் குடித்தால் ஷூட்டிங் வரமாட்டார்.

அவருக்கும் ஜெயலலிதாவிற்கும் ஒரு ஆழமான நட்பு எப்பொழுதுமே இருக்கும். இருவருமே செட்டில் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வார்கள். இருவருக்குமே ஆங்கிலம் சரளமாக வரும். அதனால் அமெரிக்கன் இங்கிலீஷில் இருவருமே ஸ்டைலாக பேசிக்கொள்வார்கள். அந்த வகையில் ஜெயலலிதாவை பார்த்து கிஸ் மி என ஸ்டைலாக கேட்டார் சந்திரபாபு.

உடனே அவரிடம் ஏன் வம்பை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என கேட்டேன். அதற்கு சந்திரபாபு 'போடா அந்த பொண்ணு நான் குழந்தையிலிருந்து பார்க்கிறேன். அவள் எனக்கு மகள் மாதிரி. அந்த ஒரு அன்பில் தான் நான் கேட்டேன்' என சொன்னாராம்.

சந்திரபாபு ராஜா படத்தில் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பிறகு அடிமைப்பெண் படத்தில் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்தவர் எம்ஜிஆர். அப்போது எம்ஜிஆர் குடிக்கிறவர்களை தனியாகவும் மற்றவர்களை தனியாகவும் படப்பிடிப்பிற்கு அழைத்து வாருங்கள் என கட்டளையிட்டாராம்.

இதை கேட்டதும் சந்திரபாபு ஒரு மாதிரி நிற்க அவரைப் பார்த்ததும் எம்ஜிஆர் இவனுக்கு இரண்டு பாட்டில் எக்ஸ்ட்ரா கொடுத்து அனுப்புங்கள் என கிண்டலாக சொல்லி சென்றாராம்'. இந்த சுவாரசிய தகவலை ஸ்ரீ கவி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Related Articles

Next Story