ரஜினிக்கும், லதாவுக்கும் இடையே அப்படி ஒரு பிரச்சனை... துறவியா போனவரு மீண்டு வந்த ரகசியம்
1985ல் ரஜினி, லதாவுக்கு இடையே பூதாகரமாக ஒரு பிரச்சனை வந்தது. ரஜினியும், லதாவும் டைவர்ஸ் பண்ணப் போறாங்கன்னு ஒரு வார இதழில் தொடர்ச்சியா எழுதுனாங்க. அதுக்கு அவங்க பல காரணங்கள் சொல்றாங்க. ரஜினிகாந்த் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற ஒரு இயக்கத்தில சேர்ந்துட்டாரு. அவருக்குக் குடும்ப வாழ்க்கை புளிச்சிப் போச்சு. ரஜினியும் அந்த இயக்கத்தில ரொம்ப தீவிரமா ஆகிட்டாரு. அவரு நடிச்ச மூன்று முகம் என்ற படத்தில் ஒரு கேரக்டர் அப்படித்தான் வரும்.
அந்தப் படத்துல 'சீதா ராமா சீதா கிருஷ்ணா'ன்னு ஒரு பாடல் கூட வரும். அதனால் தான் லதாவுக்கும் ரஜினிக்கும் பிரச்சனைன்னு ஒரு செய்தி வந்தது. அந்த ஆன்மிக இயக்கத்துக்காக போயஸ் கார்டன் வீட்டையேக் கொடுத்துட்டாருன்னும் சொன்னாங்க. இதனால் லதா ரொம்ப குமுறிப் போயிருக்காங்க.
அதனால் ரஜினி சென்னையில் மிகவும் பின்தங்கிய பகுதியான வேளச்சேரியில ஒரு வீட்டைக் கட்டியிருக்காரு. அவரு அங்க எல்லாரும் போயிடலாம்னு சொல்ல, அதுக்கு லதா சம்மதிக்க வில்லையாம். அப்படின்னு ஒரு செய்தி வருது. இதெல்லாம் கிடையாது. அவர் 'ஸ்ரீராகவேந்திரா'ன்னு ஒரு படம் நடிக்காரு.
அதுக்காக கடும் விரதம் இருக்காரு. அதனால மனைவியைத் தள்ளி வச்சிட்டாரு. அவரு நிஜமாவே ஒரு சன்னியாசி மாதிரி ஆகிட்டாரு. இல்லற வாழ்க்கையில அவருக்கு ஈடுபாடு இல்லை. ராகவேந்திரரா நடிக்கறதனால இல்லற வாழ்க்கையில ஒரு துறவியாகவே மாறிட்டாரு.
அப்படின்னு ஒரு செய்தி வருது. இன்னொரு பத்திரிகை லதா, ரஜினிக்கு இடையே பனிப்போர் நடக்குது. அதுக்கு ரஜினி டைவர்ஸ் பண்ணலாம்னு சொல்றாரு. அதுக்கு லதா ஒத்துக்கல. ரஜினி பிடிவாதமா இருக்காரு. வேற எந்தக் கதையும் கிடையாது. இந்தியில 'மகாகுரு'ன்னு ஒரு படம் நடிக்கிறாரு. அதுல அவருக்கு ஜோடி மீனாட்சி சேஷாத்ரி. இவரு என்ன பண்றாரு.
பாலிவுட்ல எந்தப் படத்துக்கு அழைப்பு வந்தாலும் ஜோடியா மீனாட்சி சேஷாத்ரி வேணும்னு அடம்பிடிக்கிறாரு. இல்லன்னா எனக்கு அந்தப் படமே வேணாம்னு சொல்றாரு. இதுதான் குடும்ப வாழ்க்கையில பெரிய பிரச்சனை ஆயிடுச்சு என்கிறார்.
அப்புறம் இன்னொரு பத்திரிகை மனைவி லதா மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களின் கட்டுப்பாட்டுக்குள் ரஜினி வந்துவிட்டார். அவங்க சொல்ற படத்துல தான் நடிக்கணும் என்றும் இருந்ததால ரஜினியோட சுதந்திரம் பறிபோயிடுதுன்னு ஒரு செய்தி வருது.
இதை எல்லாம் பார்த்த ரஜினி ஒரு கட்டத்தில துறவியாவே போயிடலாம்னு முடிவு பண்ணிடறாரு. லதாகிட்ட விஷயத்தைச் சொல்றாரு. அவங்க பதறிப் போய் டைரக்டர் பாலசந்தருக்கிட்ட சொல்றாரு. ரஜினி அவருக்கு மட்டும் தான் கட்டுப்படுவாரு.
அப்போ பாலசந்தர் வந்து சமாதானப்படுத்துகிறார். ஆனாலும் கேட்கவில்லை. கவிதாலயாவுக்காக அட்வான்ஸ் பணம்னு பாலசந்தர் கொடுக்கிறாரு. 'எனக்கு இது வேணாம். நான் நடிக்கவே இல்லை. துறவி'ன்னு சொல்றாரு. 'சரி. போ. நீ திரும்பி வந்தா என் படத்துல நடிச்சிக் கொடு'ங்கறாரு பாலசந்தர்.
ஆனா அவர் போனவர் தான். அப்போ பாலசந்தர் லதா கிட்ட அவன் போக்குல போயி தான் அவனை நம்ம வழிக்குக் கொண்டு வரணும்னு ஆறுதல் சொல்றாரு. கண்டிப்பா திரும்பி வருவான்னு சொல்றாரு. ரஜினி இமயமலை, ரிஷிகேஷ்னு போயிடறாரு. நிறைய சாமியார்களை சந்திக்கிறாரு.
ஒருநாள் அவரோட கனவுல குழந்தை ஞாபகம் வந்துடுது. சாமியாரும் 'நீ துறவி இல்ல. உனக்கு சாதிக்க நிறைய விஷயம் இருக்கு. போ'ன்னு அனுப்புறாங்க. திரும்ப வர்றாரு. ஆனா நடிக்க மாட்டேங்கறாரு. நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூப்பிடுறாங்க. ஆனாலும் மறுத்துடுறாரு. அப்போ வீட்டு வாசலுக்கு ஒரு ரசிகன் வர்றான்.
மண்ணெண்ணை கேன், தீப்பெட்டி. 'நீ மட்டும் நடிக்கலேன்னா தீக்குளிச்சிடுவேன் தலைவா'ன்னு சொல்றான். அப்போ தான் அவர் யாருன்னே தெரியாத ஒருவன் நமக்காக இப்படி பண்ணத் துணியிறானேன்னு மனம் மாறிடுறாரு. அப்போ நடிக்க ஆரம்பிச்சவரு தான் இன்னைக்கு வரைக்கும் நடிக்கிறாரு. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.