உள்ளத்தை அள்ளித்தா படத்துக்கு காரணமே அந்த நடிகை தான்… சம்பவம் செஞ்ச சுந்தர்.சி

Ullathai Allitha: சுந்தர்.சி இயக்கத்தில் வெற்றி படங்களில் ஒன்றான உள்ளத்தை அள்ளித்தா படத்திற்கு முழு முதற்காரணம் நடிகை நக்மா என்றால் நம்ப முடிகிறதா? அதுகுறித்து இயக்குனர் சுந்தர்.சி பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவான திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. இப்படத்திற்கு கே.செல்வ பாரதி வசனங்கள் எழுதி இருந்தார். இந்த படத்தினை சுந்தர்.சி இப்படத்தினை முதலில் காதலை மையமாக வைத்து தான் உருவாக்கி இருந்தாராம்.
பின்னர், காதலுடன் காமெடியை சேர்த்து ஜானரையே மாற்றி இருக்கிறார். 1958ம் ஆண்டு வெளியான சபாஷ் மீனா மற்றும் பொம்மலாட்டம் திரைப்படத்தினை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயிற்கு இந்த ரோல் செல்ல அவர் கால்ஷூட் பிரச்னையால் மறுத்துவிட்டார்.
அதை தொடர்ந்து நடிகைகள் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ரோஜா, ரவலி கால்ஷீட் பிரச்னையால் மறுத்துவிட ரம்பாவை இப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனாலும் இப்படத்தின் கதை உருவாவதற்கு காரணமே நடிகை நக்மா தானாம்.
ஒரிஜினலா அந்த படத்தின் புரோடியூசர் நக்மா தான் அந்த படத்தின் ஹீரோயின் என முடிவாகி விட்டார். அந்த நேரத்தில் நக்மா தான் மிகப்பெரிய ஹீரோயின். ஆனால் என்னிடம் இருந்த ஸ்கிரிப்டில் இளையராஜா ட்ரூப்பில் வயலின் வாசிக்கும் நாயகி, கோரஸ் பாடும் நடிகர் தான் ஒரிஜினல் கதை.
ஆனால் நக்மா மாதிரி ஒரு நடிகையை வயலின் வாசிக்கும் படி வைத்தால் நன்றாக இருக்காது. அதனால் அவரை பணக்கார பெண்ணாக வைக்கலாம். ஹீரோ கார் டிரைவர். அவன் ஏன் அங்கு இருக்கான். ஹீரோயினுக்கு பார்த்த மாப்பிள்ளை அவராக இருந்தால் எனத் தொடங்கிதான் தற்போது நீங்க பார்க்கும் உள்ளத்தை அள்ளித்தா கதையை சுந்தர்.சி மாற்றி இருக்கிறார்.
இவ்வளவு செஞ்சாலும் நக்மாவை ஒப்பந்தம் செய்ய முடியாமல் ரம்பாவை ஹீரோயினாக்கி இருந்தனர். ஆனால் அந்த படமே ரம்பாவின் சினிமா வாழ்க்கையை இன்னொரு அத்தியாத்துக்கு எடுத்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.