பச்சைப் பொய் சொன்ன வைரமுத்து... பழி தீர்த்த இயக்குனர்...! இப்படி எல்லாமா நடந்தது?
கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் பாடல் குறித்து பிரபல இயக்குனர் எம்.பாஸ்கரின் மகனும், தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்ப்போமா...
1980ல் அப்பா தயாரித்து இயக்கி வெளியான படம் சூலம். ராஜ்குமார், ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தயாரித்தவரும் அப்பா தான். இளையராஜா சூலம் படத்துக்கு மியூசிக் போட்டாரு. அப்போ தயாரிப்பாளர், இயக்குனர் ஆபீஸ்சுக்கே ஆர்மோனியத்தோட கம்போசிங்கிற்கு வருவாங்க. அப்படி வரும்போது சூலம் படத்துல 2 பாடலைக் கண்ணதாசன் எழுதினாரு. வேற யாரை எழுத வைக்கலாம்னு யோசிக்கும்போது 'வைரமுத்துன்னு ஒருத்தர் இருக்காரு.
பச்சையப்பா காலேஜ்ல புரொபசரா இருக்காரு. அவரு என்னை சந்திச்சி சில பாடல்கள் எல்லாம் கொடுத்துருந்தாரு. நல்ல கிரியேட்டரா இருக்காரு. வரிகள் எல்லாம் வித்தியாசமா இருந்துச்சு. நம்ம ஏன் அவரை அறிமுகப்படுத்தக்கூடாது...? நீங்களே அவரைக் கூப்பிட்டுப் பேசிப்பாருங்க'ன்னு அப்பாக்கிட்ட இளையராஜா சொல்றாரு.
அதைக்கேட்டதும் வைரமுத்துவை அப்பா வரச்சொல்றாங்க. அவரும் வந்தாரு. மறுநாள் ஈவ்னிங் கம்போசிங்கிற்கு வர்றாரு. அப்போ அவரு பாட்டு எழுதுற ஸ்டைல எல்லாம் பார்த்துட்டு அப்பா 'சூலம் சூலம்', 'ஊனக்கண்ணில் ஜூலி'ங்கற பாட்டையும் எழுதக் கொடுக்கிறாரு.
முதல் முதலா வைரமுத்து சார் பாட்டு எழுதுனது சூலம் படத்துக்குத் தான். முதல் முதலா அந்தப் பாட்டோட ரெக்கார்டிங் ஏவிஎம்ல நடந்தது. காலைல ஒரு பாட்டு. மாலையில் ஒரு பாட்டு. காலையில் அந்தப் பாட்டு பதிவானது. அதுல முக்கியமான விஷயம் என்னன்னா வைரமுத்து மேல அப்பா கடைசி வரைக்கும் கோபமா இருந்தாரு.
என்னன்னா 'நிழல்கள்' படத்துக்கும் வைரமுத்து இதே காலகட்டத்துல பாட்டு எழுதியிருக்காரு. அதுல நவம்பர் 6ம் தேதி 'இது ஒரு பொன்மாலைப் பொழுது'ன்னு அந்தப் பாட்டு வந்துடுச்சு. அந்தப் பாட்டு பயங்கரமா ஹிட்டாச்சு. 1980 டிசம்பர் 12ம் தேதி 'சூலம்' படம் வந்துச்சு. அப்போ முதல்ல வந்த பொன்மாலைப் பொழுது பாடல் ஹிட்டானதும் வைரமுத்து சார் என்னை முதன்முதலா அறிமுகப்படுத்துன இயக்குனர் பாரதிராஜா சார்னு சொல்லிடறாரு.
நான் முதன்முதலா பாட்டு எழுதுன படம் 'நிழல்கள்'னு பேட்டி கொடுக்குறாரு. சூலம் தான் முதல் படம்னு சொல்லல. அதனால அப்பா கோபத்துல இருந்தாரு. அவரு உண்மையை சொல்லாம மறைக்கும்போது அப்பா ஏன் கூப்பிட்டுப் பேசணும்? அப்பா யாரையும் கேர் பண்ண மாட்டாரு. அவரு எவ்வளவு வேணா பாப்புலராகட்டும். ஆனா உண்மையைச் சொல்லி இருக்கலாம் இல்லையா.
வைரமுத்துவோட உண்மையான பேரு வைரமுத்து ராமசாமின்னு பேரு வரும். அந்தப் பேரை அப்பா ரெக்கார்டு கம்பெனிக்கு அனுப்பிட்டாரு. அந்த விஷயம் வைரமுத்து காதுக்கு எட்டவே வைரமுத்து தன்னோட பேரை வைரமுத்துன்னு வைக்கணும்னு நினைச்சிருக்காரு. ரெக்கார்டு கம்பெனில போயி மாத்தப் போயிருக்காரு.
உடனே இயக்குனர் ஒப்புதல் வேணும்னு சொன்னதும் அப்பாகிட்ட வந்து கேட்க அவரு மாத்திக் கொடுத்தாரு. அடுத்து 'தீர்ப்புகள் திருத்தப்படலாம்' என்ற படம் அப்பா அறிவிக்கிறாரு. அப்போ வைரமுத்து சான்ஸ் கேட்டு வர்றாரு. அப்பா சொல்றாரு. 'உங்களுக்கு நல்ல காபி வேணா தாரேன். வாய்ப்பு தர முடியாது'ன்னு சொல்லிட்டாராம்.
அதுக்கான காரணம் கேட்டபோது பழைய விவரங்களை அவரிடம் சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். அதன்பிறகு வைரமுத்துவை கடைசி வரை அப்பா பயன்படுத்தவே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.