Connect with us
mansoor alikhan

Cinema News

விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு சூனியம் வைத்துக்கொண்ட மன்சூர் அலிகான்!. இனிமே எல்லாம் போச்சி!..

கேப்டன் பிரபகாரன் திரைப்படம் முலம் வில்லனாக அறிமுகமாகி பல திரைப்படங்களிலும் நடித்தவர் மன்சூர் அலிகான். இவரின் உடல்மொழி, வசனம் பேசும் ஸ்டைல் என எல்லாமே ரசிகர்களுக்கு பிடிக்கும். சமூக அக்கறை கொண்ட மனிதரும் கூட. ஆனால், நாக்கில் சனி இவருக்கு உண்டு. இதனாலேயே அவ்வப்போது எதையாவது பேசி, சர்ச்சையில் சிக்குவார். சில சமயம் சிறைக்கும் போவார்.

சில நாட்களுக்கு முன்பு திரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியது திரிஷாவுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு டிவிட் போட அதுபற்றிகொண்டது. லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி என பலரும் திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க விஷயம் பூதாகரமானது. இதில் கடுப்பான மன்சூர் அலிகான் எல்லோரையும் திட்ட மேலும் அது சர்ச்சையானது.

இதையும் படிங்க: வர கோபத்துக்கு பிக்பாஸ் வீட்டுக்கு போயி நல்லா கேட்பேன்!… விசித்ரா மீது காண்டான ஷகிலா….

அதோடு, ‘அட இது நல்ல விளம்பரமா இருக்கே.. நமக்கு முன்னாடி இங்கிலீஸ் சேனல்லாம் இருக்காங்களே.. இதை யூஸ் பண்ணிக்குவோம்’ என நினைத்த மன்சூர் அலிகான் தன் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார். நான் திரிஷாவை பற்றி பேசியதை தப்பா எடிட் பண்ணிட்டாங்க… என் கூட நடிக்கமாட்டேன்னு சொன்ன திரிஷா மேல கேஸ் போடுவேன்.. லோகேஷ் சின்ன பையன் அவருக்கு ஒன்னும் தெரியாது.. தயாரிப்பாளர் சங்கம் என்ன புடுங்கிட்டு இருக்கா?’ என ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.

அதன்பின் அவர் மன்னிப்பு கேட்டு கேட்டதாக ஒரு அறிக்கை வெளியானது. ஆனால், ‘மரணித்துவிடு திரிஷா என நான் சொன்னதை மன்னித்துவிடு என டைப் செய்துவிட்டனர்’ என சொன்னார் மன்சூர். அதோடு நின்றாரா என்றால் இல்லை. நீதிமன்றத்தில் திரிஷா மீது, சிரஞ்சீவி மீதும் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். அவரின் வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

இதையும் படிங்க: பிரபாஸோட அடுத்த பட ஹீரோயின்!.. தியேட்டரில் எப்படி ரசிகர்களிடம் சிக்கியிருக்காங்கன்னு பாருங்க!

வீண் விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு இப்போது மொத்த திரையுலகினரின் கோபத்துக்கும் ஆளாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இனிமேல், லோகேஷ் கனகராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன் என இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர்கள் யாரும் மன்சூர் அலிகானுக்கு வாய்ப்பு கொடுக்கப்போவதில்லை என சொல்லப்படுகிறது.

சிரஞ்சீவி மீது வழக்கு தொடர்ந்ததால் ஆந்திர சினிமா பக்கமும் மன்சூர் அலிகான் போக முடியாது. அவர் சில கோடிகள் செலவு செய்து எடுத்துள்ள ‘சரக்கு’ படம் வெளியாகுமா எனவும் தெரியவில்லை. அப்படியே ரிலீஸ் ஆனாலும் அது ஓடுமா என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு மன்சூர் அலிகான் தனக்குத்தானே சூனியம் வைத்து கொண்டதாகவே சினிமா பத்திரிக்கையாளர்கள் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க: அன்னக்கி்ளி படம் ஓடவே கூடாது!.. வேண்டிக்கொண்ட நடிகை… இப்படி ஒரு பிளாஷ்பேக்கா?!..

google news
Continue Reading

More in Cinema News

To Top