க.. அஜித்தே தொடங்கி ஓய் மம்முட்டி வரை.. சோசியல் மீடியாவை கதறவிட்ட 10 வார்த்தைகள்!..

by ramya suresh |
க.. அஜித்தே தொடங்கி ஓய் மம்முட்டி வரை.. சோசியல் மீடியாவை கதறவிட்ட 10 வார்த்தைகள்!..
X

2024 ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம். இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸாகி அதில் பல திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றது. படங்களில் பேசப்பட்ட வசனங்கள் பல சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து இருக்கின்றது. அப்படி சோசியல் மீடியாவை கதறவிட்ட டாப் 10 வார்த்தைகளை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

க.. அஜித்தே: இதில் முதலிடத்தை பிடித்திருப்பது நடிகர் அஜித் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட கடவுளே அஜித்தே என்ற வார்த்தை தான். இந்த வார்த்தையை எங்கு சென்றாலும் அஜித் ரசிகர்கள் கூவி கூவி கோஷமிட்டு வந்தார்கள். இதனை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காத நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டு அதனை நிறுத்தி வைத்திருக்கின்றார்.

மனசுலாயோ: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் திரைப்படத்தில் மனசுலாயோ என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய ட்ரெண்டிங்கை உருவாக்கியிருந்தது. அனிருத் இசையில் உருவான இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கொண்டாடி வந்தார்கள். இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மனசுலாயோ வார்த்தையை அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள்.

தாத்தா வராரு: ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்தில் தாத்தா வராரு என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தியன் 2 திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து இருந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்று இருந்த தாத்தா வராரு என்ற வார்த்தையை ட்ரோல் செய்வதற்காக அதிக அளவில் பயன்படுத்தினார்கள்.

உசுரே நீதானே: நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் அடங்காத அசுரன் இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் மற்றும் தனுஷ் இருவரும் சேர்ந்து பாடி இருப்பார்கள். இந்த பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது. அதில் இடம்பெற்று இருந்த உசுரே நீதானே என்ற பாடல் வரியை தமிழ் ரசிகர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள்.

விவாகரத்து: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு விவாகரத்து நடைபெற்றுள்ளது. தனுஷ், நடிகர் ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ், ஏ ஆர் ரகுமான் வரை பல பிரபலங்களின் விவாகரத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்தது. இதனால் தமிழ் சினிமாவில் விவாகரத்து என்ற சொல்லும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாக மாறி இருக்கின்றது.

கெத்து அன்பு: இந்த வருடம் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் லப்பர் பந்து. இந்த திரைப்படத்தில் தினேஷ் அவர்களின் பெயர் கெத்து எனவும், ஹரிஷ் கல்யாணின் பெயர் அன்பு எனவும் இடம்பெற்று இருந்தது. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படமாக மாறி இருக்கின்றது.

கங்குவா ஒரு குழந்தை: சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக ட்ரோல் செய்து வந்தார்கள். அதிலும் சூர்யா, ஞானவேல் ராஜா, சிறுத்தை சிவா ஆகியோர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பயன்படுத்திய வார்த்தைகள் அதிக அளவு கிண்டல் கேலிக்கு ஆளாக்கப்பட்டது.

சேட்டா ஓய் மம்முட்டி : தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவிக்கு இடையில் பேசும் வார்த்தைகளான சேட்டா - ஓய் மம்முட்டி போன்றவை ரீல்சில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.

தோழர்: வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற விடுதலை 2 திரைப்படத்தில் அதிக அளவு தோழர் என்னும் சொல் பயன்படுத்தப்பட்ட நிலையில் அதுவும் 2024-லில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக மாறி இருக்கின்றது.

கடைசி படம் - T 69: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய் தளபதி 69 என்கின்ற தனது கடைசி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை முடித்துவிட்டு அரசியலில் முழு நேரமும் ஈடுபட இருக்கின்றார். இதனால் கடைசி படம் என்ற வார்த்தையும், T 69 என்ற வார்த்தையும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.

Next Story