2024ல் கவனிக்கப்படாத நல்ல படங்கள் இதுதாங்க... வாய்ப்பு இருந்தா ஓடிடிலயாவது பாருங்க..!

by sankaran v |
2024ல் கவனிக்கப்படாத நல்ல படங்கள் இதுதாங்க... வாய்ப்பு இருந்தா ஓடிடிலயாவது பாருங்க..!
X

சில படங்கள் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. ஆனா கதை நல்ல கதை. படம் ஏன்தான் ஓடலன்னு தெரியலன்னு சொல்வாங்க. அப்படிப்பட்ட படங்களைப் பார்க்கணும்னு அது தியேட்டரில் இருந்து போனதும்தான் தோணும். அப்படிப்பட்ட படங்கள் வருடந்தோறும் வந்த வண்ணம்தான் உள்ளன. சரி. இந்த 2024ல் அப்படிப்பட்ட படங்கள் என்னென்னன்னு பார்க்கலாமா...

ஜமா

பாரி இளவழகன் இயக்கி நடித்து வெளியான படம் ஜமா. படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். பெண் வேடமிட்டு ஆடும் நாடகக் கலைஞனின் வலி மிகுந்த வாழ்க்கையை ரொம்ப ரசிச்சிப் பண்ணிருக்குற படம்.

பைரி

pairi

ஜான் கிளாடி இயக்கிய படம். சையத் மஜீத், மேகனா எலன் உள்பட பலர் நடித்துள்ளளனர். அருண்ராஜ் இசை அமைத்துள்ளார். புறா பந்தயத்தை மையமாக வச்சி எந்த இடத்திலும் போர் அடிக்காம அழகா எடுத்திருப்பாங்க. எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.

நந்தன்

சசிக்குமார் நடிப்பில் உருவான படம் நந்தன். எரா சரவணன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அடித்தட்டு மக்கள் அடிப்படை உரிமையைக்கூட எவ்வளவு போராடி வாங்க வேண்டி இருக்குன்னு எடுத்த படம்.

மின்மினி

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான படம் மின்மினி. கலிஜா ரஹ்மான் இசை அமைத்துள்ளார். கௌரவ் காளை, பிரவீன் கிஷோர், எஸ்தர் அனில் உள்பட பலர் நடித்துள்ளனர். முதல் பாதி எடுத்துட்டு 8 வருஷம் கழிச்சித்தான் இந்தப் படத்தோட செகண்ட் ஆஃப் எடுத்தாங்களாம். ரொம்ப அழகான விஷயம் சொல்ற மனசுக்கு ரெப்ரஷான படம் இது.

ஜே பேபி

பா.ரஞ்சித் தயாரிக்க சுரேஷ் மாரி இயக்கிய படம் ஜே பேபி. டோனி பிரிட்டோ இசை அமைத்துள்ளார். அட்டகத்தி தினேஷ், ஊர்வசி காம்போவுல வந்த படம். அழகான எமோஷனல் டிராமாதான் இந்தப் படம்

போகுமிடம் வெகுதூரமில்லை

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான படம் போகுமிடம் வெகு தூரமில்லை. என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். விமலுடன் இணைந்து கருணாஸ் நடித்துள்ளார். சேர்ந்து போற பயணத்தில் அவங்க யாரெல்லாம் சந்திக்கிறாங்க? என்பதுதான் கதை. கிளைமாக்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கும்.

ஹாட் ஸ்பாட்

hot spot

விக்னேஷ் கார்த்திக் இயக்கிய படம். கலையரசன், சோபியா, சேண்டி, அம்மு அபிராமி, ஜனனி, கௌரி கிஷன், சுபாஷ், ஆதித்யா பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இதுல இயக்குனர் நாலு கதையை சொல்லிருப்பாரு. 'எப்படிறா இது..'ன்னு யோசிக்க வச்சிட்டாங்க.

சட்டம் என் கையில்

சாச்சி எழுதி இயக்கிய கிரைம் திரில்லர் படம் சட்டம் என் கையில். சதீஷ்தான் இந்தப் படத்தோட ஹீரோ. கடைசி வரை சஸ்பென்ஸாக் கொண்டு போன நல்ல கிரைம் திரில்லர் படம் இது. சதீஷ், வித்யா பிரதீப் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ளார்.

Next Story