Categories: Cinema News latest cinema news latest news rajamouli தெலுங்கு திரைப்படங்கள் ராஜமவுலி

மொத்த பட வசூலை சேர்த்தாலும் புஷ்பா 2 கலெக்‌ஷன் வரலயே!.. டோலிவுட்டுக்கு என்னாச்சி?..

முன்பெல்லாம் அதிக வசூல் என்பது ஹிந்தி மற்றும் தமிழ் படங்களிலேயே அதிகமாக இருந்தது. ஆனால் எப்போது பாகுபலி வந்ததோ அப்போது முதலே தெலுங்கு திரைப்படங்களும் தமிழ், ஹிந்தி படங்களுக்கு இணையாக அல்லது மேலாக போட்டி போட துவங்கியது.

ராஜமவுலியின் பாகுபலி:

ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன்பின் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற நடிகர்களின் படங்கள் அதிக பட்ஜெட்டுகளில் உருவாகி பேன் இந்தியா படங்களாக வெளியாகி வருகிறது.

#image_title

ராஜமவுலி மீண்டும் இயக்கிய RRR, அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா, புஷ்பா 2 போன்ற படங்கள் வசூலை வாரிக் குவித்தது. இதில் புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்திய சினிமாவில் இதுவரை அதிக வசூலை பெற்றது இந்த திரைப்படம்தான்.

2025-ல் கோட்டை விட்ட டோலிவுட்:

அதேநேரம் 2025ம் வருடம் தெலுங்கு சினிமாவுக்கு ஒரு சிறப்பான வருடமாக அமையவில்லை. இந்த வருடம் ஜூனியர் NTR-ன் வார்டு படம் வெளியானது ஆனால் அப்பறம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் வெளியான மிராய் என்கிற படம் மட்டும் 100 கோடி வசூலை தொட்டிருக்கிறது. கடந்த எட்டரை மாதங்களில் ஆந்திராவில் வெளியான தெலுங்கு திரைப்படங்களின் மொத்த வசூலையும் சேர்த்தால் கூட புஷ்பா 2-வை நெருங்க முடியவில்லை என்கிறது டிரேடிங் வட்டாரம்.

2026 வருடமாவது தெலுங்கு சினிமாவுக்கு அதிக வசூலை கொடுக்கும் திரைப்படங்கள் வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மகேஷ்பாபுவை வைத்து ராஜமவுலி இயக்கி வரும் புதிய படம் 2027ம் வருடமே ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்கள்:

  • பாகுபலி
  • பாகுபலி2
  • R.R.R.
  • SALAR
  • சாஹோ
Published by
ராம் சுதன்