More
Categories: Cinema History Cinema News latest news

46 வருஷத்துக்கு முன்பே வசூல் மன்னன்டா! 5 லட்சத்துக்கு விற்று 50 லட்சம் வசூல் செய்த ரஜினி படம்

தமிழ் சினிமாவில் இன்று ஒரு வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோலிவுட்டில் தனக்கான ஒரு அந்தஸ்தை பெற்று பெரிய உச்ச நடிகராக இருக்கிறார். இன்றைய சூழலில் இவர் நடித்து வெளியாகும் படங்கள் குறைந்தபட்சம் 500 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகி பெரிய சாதனை படைத்த படமாக அமைந்தது ஜெய்லர் திரைப்படம். இந்தப் படம் 700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அடுத்ததாக இவரின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

இருந்தாலும் லோகேஷுடன் இணைந்து கூலி திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினியின் இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் ரஜினியை பொறுத்தவரைக்கும் இப்போது மட்டும் அவர் வசூல் மன்னன் இல்லை. அந்த காலத்திலேயே பெரிய வசூல் மன்னனாகவே இருந்திருக்கிறார்.

இதை பற்றி வி.சி.குகநாதன் ஒரு பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். அதாவது விஜயகுமார் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடித்த படம் மாங்குடி மைனர். இந்தப் படத்திற்கு கதை , திரைக்கதை, வசனம் எல்லாமே வி.சி.குகநாதன்தானாம். எம்ஜிஆர் புகழைப்பாடும் படமாக இந்தப் படம் இருக்குமாம். கே.என்.சுப்பையா இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை தனக்கு கொடுக்கும் படி கேட்டாராம்.

அந்த நேரத்தில் ஃபைனான்ஸ் தாமதம் ஆனதால் சுப்பையா கேட்டதை நல்வாய்ப்பாக எடுத்துக் கொண்டு நஷ்டமானாலும் பரவாயில்லை எனக் கருதி 5 லட்சத்திற்கு அந்தப் படத்தின் காப்பியை கொடுத்திருக்கிறார் குகநாதன். ஆனால் அந்தப் படம் 50 லட்சம் வசூல் சாதனையை பெற்றதாம். கிட்டத்தட்ட 46 வருடத்திற்கு முன்பே பெரும் வசூல் மன்னனாக இருந்திருக்கிறார் ரஜினி என அந்த செய்தியை பார்த்து பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
ராம் சுதன்