பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கார்த்தி. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். பருத்தி வீர்ன் படம் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் பையா படத்தில் நடித்து தன்னால் ஆக்ஷன் படங்களிலும் நடிக்க முடியும் என காட்டினார்.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறினார். இவரின் அண்ணன் சூர்யா வெற்றி, தோல்வி என மாறி மாறி கொடுத்தாலும் கார்த்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். சூர்யாவைவிட கார்த்தி படங்கள் மினிமம் கேரண்டி உள்ள திரைப்படங்களாக இருக்கிறது.
இப்போது சர்தார் 2, வாத்தியார் போன்ற படங்களை முடித்துவிட்டு இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். துவக்கம் முதலே கிரீன் ஸ்டுடியோஸ், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற தனது உறவினர்களின் தயாரிப்பு நிறுவனங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்நிலையில், இனிமேல் மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களிலும் நடிப்பது என முடிவு செய்திருக்கிறாராம். இதனால் மற்ற தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனார்.
அமராவதி திரைப்படம்…
விஜய் நடிப்பில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் நடித்துள்ள…