Categories: latest news

குபேரா டிரைலர் இருக்கட்டும்… தனுஷுக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்… தப்பிப்பாரா?

Kuberaa Trailer: தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இன்னொரு அப்டேட் கசிந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் குபேரா. தனுஷுடன் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நாட்டின் பெரிய பணக்காரருக்கும், மிகப்பெரிய ஏழைக்கும் நடக்கும் கதை தான் குபேரா.

இந்தப் படம் 130 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. தனுஷுக்கு மட்டும் 30 கோடி ரூபாயும், மிக முக்கிய கேரக்டரில் நடிக்கும் நாகர்ஜுனாவுக்கு 14 கோடி ரூபாயும் சம்பளம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது

குபேரா தமிழுடன் கூட தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டு வருவதால் இப்படம் பேன் இந்தியா படமாக்கப்பட இருக்கிறது. முதலில் ஏப்ரல் மாதம் வெளியாக திட்டமிட்டு இருந்த நிலையில், போஸ்ட்‑புரொடக்‌ஷன் காரணமாக நீடிக்கப்பட்டு, ஜூன் 20, 2025க்கு வெளியிடப்பட இருக்கிறது.

இப்படத்தில் தனுஷ் மற்றும் நாகர்ஜூனா இணைந்து நடிக்க இருப்பதால் ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் சமீபத்தில் தணிக்கைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து யுஏ சான்றிதழுடன் 193 நிமிடங்கள் அதாவது 3 மணி 13 நிமிடங்கள் என்ற நீளத்துடன் வெளியீட்டு அனுமதி பெற்றுள்ளது.

தொடர்ந்து எடிட்டிங்கில் இதன் நீளத்தினை 181 நிமிடம் அதாவது 3 மணி நேரம் ஒரு நிமிடமாக குறைத்துள்ளனர். இப்போது அதனைத் தொடர்ந்து ரசிகர்கள், “இவ்ளோ நேரம் இருக்குதா இப்படம்?” என்பதையும், “நீளமான படம் சமாளிக்க முடியுமா?” என்பதையும் கேள்வியாக எழுப்பி வருகின்றனர்.

இந்த ரன் டைம் பற்றி சொல்ல வேண்டுமானால், தமிழ் சினிமாவில் இது மிக நீளமான படங்களில் ஒன்றாக இருக்கப்போகிறது. முக்கியமாக, இந்த நீளம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வந்தாலும், சிலர் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

“நல்ல கதை இருந்தா runtime பிரச்சனை இல்லை” என கூறுகிறார்கள். படம் நிறைய முக்கியமான சமூக விஷயங்களை கையாளும் என்பதால், அந்தப் விஷயத்தை சரியாக சொல்லவே இந்த ரன் டைம் தேவைப்படுகிறதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago