எனக்கு பேண்ட் எப்படி போடணும்னு சொல்லி கொடுத்ததே அவர்தான்!.. ஓப்பனா சொன்ன சூர்யா!...

Actor Suriya: சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். சினிமாவில் நடிக்கும் ஆர்வமெல்லாம் இவருக்கு இருந்ததே இல்லை. ஆனால், இயக்குனர் வஸந்த் வற்புறுத்தியதால் சினிமாவுக்கு வந்தார். துவக்கத்தில் அவர் நடித்த படங்களில் அவரின் நடிப்பு அவருக்கே திருப்தியாக இல்லை.
பாலாவிடம் கேட்ட வாய்ப்பு: அப்போதுதான் சேது பார்த்துவிட்டு பாலாவிடம் ஓடி ‘என்னை வச்சி ஒரு படம் எடுங்கண்ணே’ என சூர்யா கேட்க அப்படி உருவான படம்தான் நந்தா. சாக்லேட் பாயாக பார்த்த சூர்யாவை இந்த படத்தில் முழுக்க முழுக்க டெரறாக காட்டியிருந்தார் பாலா. இந்த படத்தை பார்த்துவிட்டுதான் சூர்யாவை வைத்து காக்க காக்க எடுத்தார் கவுதம் மேனன்.
சிங்கம் படத்தில் நடிக்க வைத்து சூர்யாவை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் இயக்குனர் ஹரி. இப்படி சூர்யாவின் வளர்ச்சிக்கு பலரும் காரணமாக இருந்திருக்கிறார்கள். ஆனால், பாலா, கவுதம் மேனன், ஹரி என இவர்கள் மூவரையுமே பின்னாளில் கழட்டிவிட்டார் சூர்யா.
ஹரியின் சிங்கம் சீரியஸ்: சிங்கம் 3-க்கும் பின் ஹரி சொன்ன கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, அந்த படத்தில் அருண் விஜய் நடித்தார். கவுதம் மேனன் சொல்லிய துருவ நட்சத்திரம் கதையிலும் சூர்யா நடிக்கவில்லை. பாலாவின் வணங்கான் படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு அப்படத்திலிருந்து வெளியேறினார் சூர்யா. இதற்கு பின்னணியில் சில காரணங்களும் இருந்தது.
சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. சூர்யாவை பிடிக்காத பலரும் அவருக்கு எதிராக கம்பு சுத்தி இப்பபடத்தை காலி செய்து சந்தோஷப்பட்டார்கள். ஆனாலும் சூர்யா அதிலிருந்து மீண்டும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.
சூர்யாவின் புதிய படங்கள்: கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரெட்ரோ எனும் படத்தில் நடித்து முடித்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவின் 45வது திரைப்படமாகும். அடுத்து மலையாள பட இயக்குனர் பாசில் ஜோசப் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார்.
இந்நிலையில், ஊடகமொன்றில் பேசிய சூர்யா ‘துவக்கத்தில் நான் பேண்ட்டை இடுப்புக்கு மேல் போட்டிருப்பேன். சிங்கப்பூரில் இருந்து என்னை ஒரு ரசிகர் தொடர்புகொண்டு ‘பேண்ட்டை நீங்கள் இடுப்புக்கு கீழே போட்டால் நன்றாக இருக்கும்’ என சொன்னார். அன்று முதல் அதை ஃபாலோ செய்து வருகிறேன். இப்படி சிங்கப்பூர் மக்களிடமிருந்து பல நல்ல அறிவுரைகள் எனக்கு கிடைத்திருக்கிறது’ என சொல்லியிருக்கிறார்.