புஷ்பா 2 ஓடும் தியேட்டரில் இன்னொரு மரணம்!.. ஆந்திராவில் அதிர்ச்சி!..

by சிவா |

Pushpa 2: அல்லு அர்ஜூனின் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம்தான் புஷ்பா 2. இந்த படத்தின் முதல் பாகம் 2 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ஹிட் அடித்தது. எனவே, இரண்டாம் பாகத்தை அதிக பட்ஜெட்டில் உருவாக்கினார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

புஷ்பா முதல் பாகம் போலவே இந்த படமும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு பேன் இண்டியா திரைப்படமாக புஷ்பா 2 வெளியானது. இந்த படத்தில் பக்கா ஆக்‌ஷன் காட்சிகளும், தெலுங்கு படங்களுக்கே உரிய பில்டப் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. அல்லு அர்ஜூனின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுவரை இப்படம் 922 கோடிகளை வசூல் செய்திருக்கிறது.

சமீபகாலமாக பெரிய நடிகர்களின் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களை சில தியேட்டர்களில் மட்டும் சிறப்பு காட்சி என்கிற பெயரில் அதிகாலை ஒரு காட்சியை திரையிடுகிறார்கள். சில சமயம் படத்தின் ஹீரோவே ரசிகர்களோடு படத்தை பார்க்கும் ஆர்வத்தில் தியேட்டருக்கு போவதுண்டு.

allu arjun

அப்படி போகும் அந்த நடிகரை காண ரசிகர்கள் முண்டியடிப்பதுண்டு. அது போல ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜூனும் தியேட்டருக்கு போக சிறப்பு காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டரில் முண்டியடித்தனர். அந்த நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.

இது தொடர்பாக அல்லு அர்ஜூன் மீதும், அந்த தியேட்டர் நிர்வாகத்தின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்தார் அல்லு அர்ஜூன். மேலும், புஷ்பா 2-வின் வெற்றியை கொண்டாட முடியாத மனநிலையில் இருப்பதாகவும் பேசி வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில், புஷ்பா 2 படம் ஓடும் தியேட்டரில் மற்றொரு மரணம் நிகழ்ந்திருக்கிறது. ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் புஷ்பா 2 படம் பார்த்துக்கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்தும் தியேட்டர் நிர்வாகம் படத்தை நிறுத்தவில்லை.

எனவே, ரசிகர்கள் தியேட்டர் ஊழியர்களிடம் வாக்கு வாதம் செய்தனர். அதன்பின் போலீசார் அங்கு வந்து படத்தை நிறுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story