Simbu: சிம்பு படங்களுக்கு தொடர்ந்து வரும் சிக்கல்... அவர் சரியா இருந்தாலும் அவர் நேரம் சரியில்ல போல!...
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் மிகச் சிறந்த நடிகராக வளம் வந்தவர் நடிகர் சிம்பு. தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களை கொடுத்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வந்தார். அதற்கு பிறகு யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை தொடர்ந்து சறுக்கல் தான். தேவை இல்லாமல் வாயை விட்டு பல சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் காதல் லீலைகள் வேறு, பல நடிகைகளுடன் நெருக்கமாக பழகி காதலித்து வருவதாக கூறிக் கொண்டிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சங்கத்தில் ரெட் கார்ட் பிரச்சனை, சரியாக நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வராமல் கேட்டால் திமிராக பேசிக்கொண்டு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அதனைத் தொடர்ந்து உடல் எடை கூடி வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் டான்ஸ் ஆடுவதற்கு கூட மிகச் சிரமப்பட்டார். இப்படி பல விஷயங்கள் அவரை சுற்றி சுற்றி அவரின் மார்க்கெட்டை மொத்தமாக டேமேஜ் செய்துவிட்டது.
எப்படியோ இந்த பிரச்சனைகளில் எல்லாம் விடுபட்டு கடகடவென்று தனது உடல் எடையை குறைத்து மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கின்றார். இப்போது சினிமாவில் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருகின்றார். என்ன செய்வது நாம் சும்மா இருந்தாலும் நம் நேரம் சும்மா இருக்காது அல்லவா? அப்படித்தான் தற்போது சிம்புவுக்கு தொடர்ந்து சிக்கல்கள் வந்து கொண்டிருக்கின்றது.
நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலமாக ஒரு சிறந்த கம்பேக் கொடுத்திருந்தார். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு ஒரு சிறந்த வெற்றியை கொடுத்தது. பின்னர் பத்து தல என்ற திரைப்படத்தில் மாஸாக நடித்து அசத்தியிருந்தார். சரி ஒரு வழியாக சிம்பு பழைய பார்முக்கு வந்து விட்டார் என்று பலரும் நம்பிக் கொண்டிருந்த நிலையில் கடைசியாக நடித்த பத்துதல திரைப்படத்துடன் எந்த திரைப்படங்களும் வெளியாகாமல் இருந்து வருகின்றது.
தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கமல்ஹாசன் உடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது. அதற்கு முன்னதாகவே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதன் பிறகு சாட்டிலைட் டிஜிட்டல் உரிமம் பிரச்சனை காரணமாக அந்த திரைப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். ராஜ்கமல் நிறுவனம் தற்போது அந்த படத்தை அவர்கள் எடுக்கப் போவதில்லை என்றும் கூறிவிட்டார்கள். இருப்பினும் படத்தின் கதை நன்றாக இருப்பதால் எப்படியாவது ஒரு ப்ரொடியூசரை ரெடி செய்து இந்த படத்தை எடுத்து விட வேண்டும் என்று முடிவில் இருக்கின்றார்.
சிம்பு இதற்காக தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரயோஜனம் இல்லை. இதனால் தானே இந்த திரைப்படத்தை தயாரித்து விடலாம் என்ற முடிவில் இருக்கின்றார் நடிகர் சிம்பு. இதற்கு இடையில் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. தகவல் மட்டுமே வந்தது தவிர படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வரவில்லை.
ஆனால் இந்த திரைப்படம் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள். காரணம் என்னவென்றால் இப்படத்தை தயாரிப்பது ஏஜிஎஸ் நிறுவனம். அந்த நிறுவனம் தயாரித்த எந்த திரைப்படங்களுமே பாதியில் நின்றது கிடையாது. அதனால் இந்த திரைப்படம் எப்படியும் வந்துவிடும் என்று சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.