Categories: latest news

1000 கோடி வசூல் பண்ணியே ஆகணும்!.. AA26 படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா?!…

AA26 Update: சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் அட்லி இயக்கும் புதிய படத்தில் புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜூன் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. எப்போதுமே அதிக பட்ஜெட்டில் படமெடுப்பவர் அட்லில். ஏனெனில், இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் வேலை செய்தவர்.

எனவே, அவரைப்போலவே அதிக பட்ஜெட்டுக்களில் படமெடுத்து தயாரிப்பாளரை கதறவிடுவார். படம் தயாரிப்பாளருக்கு லாபமா? நஷ்டமா? என்றெல்லாம் பார்க்கமாட்டர். அதை விட அதிக பட்ஜெட்டில் படமெடுக்க எந்த தயாரிப்பாளர் கிடைப்பார் என்று மட்டுமே பார்ப்பார். இவரின் படங்களில் எல்லா காட்சிகளிலும் ரிச்னெஸ் அதிகமாகவே இருக்கும்.

புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ஹிட் அடித்ததால் பேன் இண்டியா ஸ்டாராக மாறினார் அல்லு அர்ஜூன். அடுத்து வந்த புஷ்பா 2 படம் 1800 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்துவிட்டது. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படமாகவும் புஷ்பா 2 இருக்கிறது.

அதேபோல், ஷாருக்கானை வைத்து அட்லி கடைசியாக இயக்கிய ஜவான் படமும் 1300 கோடி வசூலை பெற்றது. எனவேதான், சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனும், அல்லு அர்ஜூனும் அட்லியை நம்பி வந்திருக்கிறார்கள். இது அல்லு அர்ஜூனுக்கு 26வது திரைப்படமாகும். இன்னும் தலைப்பு வைக்கப்படாததால் இப்போதைக்கு AA26 என அழைக்கிறார்கள்.

ஹாலிவுட் கதாசிரியரோடு இணைந்து இப்படத்திற்கான கதையை உருவாக்கி, ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு சூப்பர் ஹீரோ படமாக இதை உருவாக்கவிருக்கிறார் அட்லி. இந்த படத்தில் 5 நடிகைகள் நடிக்கவிருக்கிறார்களாம். இதில், தீபிகா படுகோனேவும் ஒருவர் என்பதை நேற்று அறிவித்தார்கள். தீபிகா படுகோனேவுக்கு 25 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

அல்லு அர்ஜூனுக்கு 175 கோடி, அட்லிக்கு 100 கோடி சம்பளம் என சொல்லப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம், படமெடுக்கும் செலவு என எல்லாவற்றையும் சேர்த்தால் படம் எப்படியும் 600 கோடி பட்ஜெட்டை தாண்டும் என்கிறார்கள். எனவே, ஆயிரம் கோடி வசூலை தாண்டினால் மட்டுமே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இப்படம் லாபமாக அமையும் என்கிறார்கள்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

1 hour ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago