லோகேஷின் ட்ரீம் ப்ராஜெக்ட்... கண்டுக்காத சூர்யா... பெரிய தலைய இறக்க போடும் பிளான்...!
தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர் என்கின்ற பட்டத்தை பெற்றிருக்கின்றார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் பாலிவுட் சினிமா வரை இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றது. தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார். 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
அதைத் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் கைதி, விஜய் நடிப்பில் மாஸ்டர், கமலஹாசன் நடிப்பில் விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்கள்தான். கடைசியாக விஜய் வைத்து லியோ என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக மாஸ் காட்டி இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 ஆவது திரைப்படமான கூலி திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் சரியானதற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் ட்ரீம் ப்ராஜெக்ட் என்றால் அது இரும்புகை மாயாவி என்கின்ற திரைப்படம் தான்.
இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் பல வருடங்களுக்கு முன்பு இயக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். நடிகர் சூர்யாவை வைத்து இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அது நடைபெறாமல் போனது. இருப்பினும் அந்த திரைப்படத்தை இயக்குவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் நடிகர் அமீர்கான் உடன் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.
அதில் தன்னிடம் இருந்த ஒரு கதையை அமீர் கானுக்கு கூறியதாகவும், அந்த கதை அமீர்கானுக்கு பிடித்திருப்பதால் அதில் நடிப்பதற்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதில் லோகேஷ் கனகராஜ் தனக்கு கூறிய இரும்பு கை மாயாவி திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் அந்த திரைப்படம் கட்டாயம் வரும். அதில் நான் நடிக்கலாம் இல்லையென்றால் வேறு ஒரு பெரிய நடிகர் கூட நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்று கூறி இருக்கின்றார். ஒருவேளை அவர் அமீர்கானை தான் அவர் அப்படி கூறுகிறார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.