Categories: latest news

வீட்டை விட்டு போகும் போது என்னெல்லாம் எடுத்துட்டு போனாரு தெரியுமா? லிஸ்ட் போட்ட ஆர்த்திரவி

மீண்டும் ஆர்த்திரவியின் அறிக்கை கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாறி மாறி ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் சோசியல் மீடியாக்களில் சண்டை போட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் ஆர்த்தி ரவி பெரிய பக்க அளவில் அறிக்கையை விட்டுருக்கிறார். அதில் தன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வருவதை தாங்கிக் கொள்ளவில்லை என்பது மாதிரி மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் ஆர்த்தி ரவி.

அதில் ஒருமுறை கடைசியாக உண்மையை சொல்ல அவசியமானது என விரும்புகிறேன். எங்கள் திருமண உறவு இந்தளவுக்கு ஆனதுக்கு காரணம் மூன்றாவது நபர் என கூறியிருக்கிறார். உங்கள் வாழ்வின் ஒளி என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வின் வெளிச்சத்தை இருளாக்கிவிட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார். அவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக என்னுடைய லண்டனின் முதுகலைப்பட்டம் , லட்சியம், கனவுகள் என எல்லாவற்றையும் துறந்தேன். எனது சொந்த அடையாளத்தில் இதைவிட இருமடங்கு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பேன்.

ஆனால் காதலின் பேரில் நம்பிக்கையின் பேரில் வாழ்ந்துவிட்டேன். தனது சொத்துக்களை கௌரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. நன்றாக முன்கூட்டியே மிகத் தெளிவாக திட்டமிட்டே சென்றிருக்கிறார். போகும் போது விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து தனக்கு தேவையான அனைத்துப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு ஐந்து கோடி மதிப்புள்ள ரேஞ்சு ரோவர் காரில்தான் வீட்டை விட்டு சென்றார்.

அவரை யாரும் துரத்தவில்லை. உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்தால் தொலைத்த பெற்றோர் என்று சொல்லும் அவருடைய பெற்றோர் வீட்டிற்குத்தானே சென்றிருக்க வேண்டும். அதைவிட்டு எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை ஏன் தட்டினார்? திட்டமிட்டு நடந்த இந்த சதியை யாரும் தற்காப்பு நடவடிக்கையாக கொள்ள வேண்டாம்.

aarthi

வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தேன் என்று சொல்வதும் பொய்யான குற்றச்சாட்டு. நான் பலவீனமானவள் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டுள்ள அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்கிறேன். ஒரு போதும் தாழ்ந்து போக மாட்டேன். இதற்கு மேல் நான் ஏதுவும் பேசவில்லை. ஏனெனில் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும் வரை காத்திருப்பேன் என அந்த அறிக்கையில் ஆர்த்தி ரவி கூறியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

28 minutes ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

3 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

16 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

17 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

17 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

18 hours ago