Aarthi Ravi: ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து பிரச்னை எக்கசக்கமாக எகிறிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இதில் அடுத்த ஒரு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.
ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அவர் மனைவி இதில் தனக்கு உடன்பாடு இல்லை. என்னிடம் அவர் பேசவில்லை. அவரின் முடிவை கூட என்னிடம் சொல்லி அறிவிக்கவில்லை என தொடர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதை தொடர்ந்து ரவி மோகனுக்கும், பாடகி கெனிஷாவுக்கும் காதல் என கிசுகிசுக்கள் கிளம்பியது. ஆனால் கெனிஷா என்னுடைய தோழி தான் என்றும் ரவி மோகன் விளக்கம் அளித்திருப்பார். சில மாதங்கள் கடக்க ஐசரி கணேஷ் வீட்டு விழாவில் இருவரும் தம்பதியாக கலந்து கொண்டனர்.
அதனால் விஷயம் சூடுபிடித்தது. என்னுடைய கணவர் என்னையும் என் பிள்ளைகளையும் பார்க்கவே வரவில்லை. அம்மாவாக அமைதியாக இருக்கிறேன். எங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை. என்னை அவரின் முன்னாள் மனைவி எனக் கூறிப்பிடக்கூடாது என அவர் பதிவிட்டார்.
இதை தொடர்ந்து ரவி மோகன், என்னை தங்க முட்டை போடும் வாத்தாக அவர்கள் பயன்படுத்தினர். என் மாமியார் என்னிடம் காசு கேட்டு கொடுமை செய்தார். வீட்டில் இருந்து வெறும் காலுடன் வந்த என்னை கெனிஷா தான் ஒளியாக காப்பாற்றினார் என உருக்கமாக ரவி மோகன் பதிவு வைரலானது.
இப்படியே இருவரும் மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த நிலையில் சர்ச்சை பாடகி சுசித்ரா, ஆர்த்தி விவாகரத்தில் அவர் மீதே தப்பு இருக்கு என்றும் பிரபல நடிகருடனும் சேர்த்து கொச்சையாக பேசினார்.
இந்நிலையில் ஆர்த்தியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். அப்புகாரில் சுசித்ராவின் இந்த ஆபாசமான கருத்துக்கள் என் மகள் மற்றும் மனைவியின் கண்ணியத்தையும், தனியுரிமையை பாதிக்கிறது. எங்களை குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் தமிழ் திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பல ஆண்டுகளாக காப்பாற்றி வந்த எங்க குடும்ப கண்ணியத்தினை சீர்குலைத்து இருக்கும் சுசித்ரா மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…