சிம்பு மிஸ் பண்ணத குட் பேட் அக்லியில் இறக்கிய ஆதிக்!.. சும்மா பட்டாசா வெடிக்குமாம்!...
திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்தப் படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து AAA என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் ஆதிக்குக்கு ஒரு கண்ணீர் காவியமாக மாறியது. ஆதிக் நினைத்தது ஒன்னு. ஆனால் படத்தில் இருந்தது ஒன்னு. அதனால் எடுத்த வரைக்கும் போதும் என சொல்லிவிட்டுத்தான் அந்தப் படத்தை ரிலீஸ் செய்தார்கள்.
ஆனால் படம் படுதோல்வியடைந்தது. ஒரு இயக்குனரை பொறுத்தவரைக்கும் தான் நினைத்ததை படத்தில் எடுக்கவிடாமல் தடுத்து அந்தப் படமும் ரிலீஸாகி தோல்வியடைந்தால் அப்போது சம்பந்தப்பட்ட இயக்குனருக்கு ஏற்படும் வலி இருக்கே. அது தீராத வலி. அப்படித்தான் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஏற்பட்டது. ஒரு வேளை இவர் நினைத்த மாதிரி படத்தை எடுத்திருந்தால் சிம்புவின் படம் வெற்றியடைந்திருக்கும்.
அதன் பிறகு மார்க் ஆண்டனி படத்தை கையில் எடுத்து படத்தை வேறு லெவலுக்கு கொண்டு போனார் ஆதிக். இன்று தமிழ் சினிமாவில் ஒரு கவனிக்கப்படும் இயக்குனராக மாறியிருக்கிறார். அதுவும் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தையும் எடுத்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஆதிக். குட் பேட் அக்லி படம் ஏப்ரம் 10 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது.
படத்தின் டீஸர் வெளியாகி பெரிய அளவில் ஹைப்பை கிரியேட் செய்திருக்கிறது. படத்தை பார்த்த முக்கியமான சிலர் படம் நன்றாக வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள் .இந்த நிலையில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் ஆதிக் என்ன நினைக்க எடுத்தாரோ அதை ஒரு கதையாக வைத்து குட் பேட் அக்லி படத்தில் சேர்த்திருக்கிறாராம். இதில் அக்லி கேரக்டரில் அஜித் நடிக்கும் கேரக்டர்தான் சிம்பு படத்தில் அவர் எடுக்க நினைத்ததாம்.
அதனால் AAA படத்தால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை இந்தப் படத்தின் மூலம் துடைத்துவிடுவார் ஆதிக் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AAA படத்தில் மைக்கேல் கேரக்டரில் வரும் சிம்புவின் கதையாகக் கூட அக்லி கேரக்டரில் அஜித் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.