Categories: latest news

வெளிநாட்டுக்கு போய் படிக்க ஆசைப்பட்ட நடிகை!.. அதை தடுத்து அலேக்கா தூக்கிய கமல்!…

Actress Abirami: கேரளாவில் பிறந்த தமிழ் பெண் அபிராமி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவில்தான் படித்தார். இவரின் நிஜப்பெயர் திவ்யா கோபிகுமார். சினிமாவுக்காக அபிராமி என மாற்றப்பட்டது. 2004ம் வருடம் இவரின் குடும்பம் அமெரிக்காவில் செட்டில் ஆனது. அங்கு ஒரு கல்லூரியில் உளவியல் தொடர்பான படிப்பை படித்தார் அபிராமி.

1995ம் வருடம் இவர் மலையாள சினிமாவில் நடிக்க துவங்கினார். 5 வருடங்கள் கழித்து அர்ஜூன் நடித்த வானவில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம், சார்லி சாப்ளின் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

விருமாண்டி வாய்ப்பு: தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார். சில தெலுங்கு படங்களிலும் திறமை காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவில் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது விருமாண்டி. கமல் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் இது. இந்த படத்தில் அன்னலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் அபிராமி.

படத்தின் கதையே இவரை சுற்றி அமைவது போல கதை எழுதியிருந்தார் கமல். அதோடு, இந்த படத்தில் அபிராமிக்கு கமல் லிப்லாக் கொடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் வரும் ‘உன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல’ என்கிற பாடல் சூப்பர் மெலடியாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் 36 வுயதினிலே, மாறா, சுல்தான், மகாராஜா, வேட்டையன் உள்ளிட்ட சில படங்களில் அபிராமி நடித்திருக்கிறார்.

அமெரிக்காவில் சைக்காலஜி: இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைப் படத்திலும் அபிராமி நடித்து வருகிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அபிராமி ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துகொண்டார். விருமாண்டி படம் உருவான போது நான் அமெரிக்காவில் சைக்காலஜி கோர்ஸ் படிக்க ஆசைப்பட்டேன். இங்கிருந்து பிரபலமான ஒருவரிடம் சிபாரிசு கடிதம் தேவைப்பட்டது. எனவே, கமல் சாரிடம் சென்று சிபாரிசு கடிதம் கேட்டேன். ஆனால், தரமுடியாது என சொன்னவர் ‘சினிமாவை விட்டு நீ போகக்கூடாது. உனக்கு உங்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என சொன்னார்.

ஆனால், விருமாண்டி படத்தில் நடித்து முடித்த பின் எனக்கு மீண்டும் அட்மிஷன் கிடைத்தது. அதனால் படிக்க சென்றுவிட்டேன். ஏனெனில் அது என் பல நாள் கனவு’ என சொல்லியிருக்கிறார். இப்போது ஏஐ படிப்பை படிக்க கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா