இதெல்லாம் ஒரு மூஞ்சி? மேக்கப் போட கூட தயங்கிய மேக்கப் மேன்.. பின்னாளில் உச்சம் தொட்ட அந்த நடிகை

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் இன்று பெரும் சாதனைகளை படைத்த நடிகைகளின் வாழ்க்கையை திருப்பி பார்க்கும் போது அவர்கள் பட்ட வேதனை என்ன? என்ன மாதிரியான போராட்டங்களை சந்தித்திருக்கின்றனர் என்பது தெரியவரும். பல கஷ்டங்களை கடந்துதான் இந்தளவு உச்சத்தை அடைந்திருப்பார்கள். அந்த வகையில் கோலிவுட்டில் ஏராளமான நடிகைகளை பற்றி கூறலாம்.

இந்த நிலையில் சினிமாவில் அறிமுகமாகும் இதெல்லாம் ஒரு மூஞ்சியா? என்று விமர்சிக்கப்பட்ட நடிகைகள் ஏராளம். இதில் மேக்கப் மேன் கூட ஒரு நடிகையின் தோற்றத்தை பார்த்து மேக்கப் போடவே தயங்கினாராம். அது எந்த நடிகை என்பதை கடைசியில் பார்ப்போம். முதலில் ராதிகாவின் ஆரம்பகால பயணத்தை பார்க்கும் போது சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

இதைப் பற்றி சித்ரா லட்சுமணன் அவருடைய யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார். ராதிகா முதன் முதலில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில்தான் அறிமுகமானார். அப்போது சித்ரா லட்சுமணம் பத்திரிக்கை செய்தி தொடர்பாளராக பணிபுரிந்தாராம். உடனே சித்ரா லட்சுமணன் பாரதிராஜாவிடம் ‘பத்திரிக்கையில் ராதிகாவின் புகைப்படத்தை போட்டு இந்தப் படத்தில் ராதிகாதான் ஹீரோயின் என அறிவித்துவிடவா’என கேட்டாராம்.

அதற்கு பாரதிராஜா ‘ராதிகாதான் ஹீரோயின் என்று மட்டும் போடு. தயவுசெய்து அவர் புகைப்படத்தை போடவேண்டாம்’ என கூறினாராம். அவர் சொன்னதுக்கு காரணம் அந்த நேரத்தில் ராதிகா மிகவும் குண்டாக இருந்திருக்கிறார். மேட்டுப்பாளையத்தில் சூட்டிங்கிற்காக செல்ல அங்கு ராதிகாவை பார்த்ததும் அனைவருமே பாரதிராஜாவுக்கு எதற்கு இந்த வேண்டாத வேளை? எப்படி இந்த மாதிரி ஒரு நடிகையை தேர்வு செய்தார்? என்றெல்லாம் கூறினார்களாம்.

இதே போல்தான் பழம்பெரும் நடிகையான டி.ஆர். ராஜகுமாரியும் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வரும் போது கருமையான நிறத்துடன் நடிகைக்கான அந்தஸ்தே இல்லாதவராகத்தான் இருந்திருக்கிறார். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை கே,சுப்பிரமணியத்தையே சேரும். அவர் இந்த முடிவை எடுத்த போது சுற்றியிருந்தவர்கள் அனைவரும் ராதிகாவை எப்படி விமர்சனம் செய்தார்களோ அப்படித்தான் பேசினார்களாம்.

ஏன்? கே.சுப்பிரமணியத்திடம் மேக்கப் மேனாக இருந்தவர் கூட டி.ஆர். ராஜகுமாரிக்கு மேக்கப் போடவே மறுத்தாராம். ஆனால் டி.ஆர். ராஜகுமாரி அதன் பிறகு தமிழ் சினிமாவில் எப்பேற்பட்ட உயரத்தை தொட்டார் என அனைவரும் அறிந்த விஷயம். இவரைப் போலத்தான் ராதிகாவும் 40 வருடத்திற்கு மேலாக இந்த சினிமாவில் பயணம் செய்து எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு எப்பேற்பட்ட புகழைச் சேர்ந்தார் என அனைவருக்கும் தெரியும்.

Next Story