விஜயை தொடர்ந்து நடிப்புக்கு எண்ட் கார்டு போடும் அஜித்! ஆனா இது வேற மாறி..

by ராம் சுதன் |

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு அஜித் சினிமாவில் கேப் எடுக்கப் போவதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கோலிவுட்டில் ரஜினி,கமல் இவர்களுக்கு அடுத்தபடியான ரேஞ்சில் விஜயும் அஜித்தும்தான் இருக்கிறார்கள். இதில் விஜய் கோட் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக எச். வினோத்துடன் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார்.

அந்தப் படத்தையும் முடித்து விட்டு அதன் பிறகு சினிமாவிற்கே முற்றுப்புள்ளி வைக்கிறார் விஜய். அதன் பிறகு நேரடியாக ஒரு முழு நேர அரசியல்வாதியாக மாறுகிறார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறார் விஜய். இது விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரும் அதிர்ப்தியாக இருந்தாலும் தன்னுடைய தலைவன் அரசியலுக்கு வருவதால் அரசியலில் துணையாக இருப்போம் என ஆறுதல் கொள்கின்றனர்.

இருந்தாலும் சினிமாவிற்கு ஒரு மாஸ் ஓப்பனிங்காக இருப்பதே விஜயின் திரைப்படம்தான். அதனால் அவர் சினிமாவில் இருந்து விலகுவது சினிமாவிற்கு ஒரு பெரிய நஷ்டம் தான் என கூறிவருகிறார்கள். இந்த நிலையில் இப்போது அஜித்தும் ஒரு வருட காலம் சினிமாவிற்கு இடைவெளி கொடுக்கப் போவதாக ஒரு செய்தி பரவி வருகின்றது.

அவருக்கு ஏதோ ஒரு ஆப்ரேஷன் செய்ய இருக்கிறதாம். ஏற்கனவே அப்போல்லோவில் சமீபத்தில்தான் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மேலும் ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டுமாம். அதை முடித்துவிட்டு அஜித் ஒரு வருடம் ரெஸ்ட் எடுக்க வேண்டுமாம்.

அப்படி எனில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் நிலைமை? என கேட்கலாம். ஆனால் குட் பேட் அக்லி படத்தை முடித்துவிட்டுத்தான் அஜித் அந்த ஆப்ரேஷனையே செய்ய இருக்கிறாராம். அதன் பிறகுதான் ஒரு வருடம் ரெஸ்ட் எடுக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சிறுத்தை சிவாவுடன் ஒரு கமிட்மெண்ட், மோகன்ராஜாவுடன் ஒரு கமிட்மெண்ட் என வைத்திருந்தாரே என்றும் கேட்கலாம். ஆனால் சிறுத்தை சிவா கங்குவா 2 படத்தை எடுக்கவே ஒரு வருடம் ஆகும் என்றும் மோகன் ராஜாவும் திடீரென தனி ஒருவன் 2விலும் பிஸியாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதனால் அஜித்தின் அந்த ரெஸ்ட் காலமும் முடிந்துவிடும். அதன் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் அஜித் என கூறப்படுகிறது. இருந்தாலும் ஒரு வருடம் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் விஜய், இன்னொரு பக்கம் அஜித் என சினிமாவில் இல்லாமல் போவது என்பது நினைத்துக் கூட பார்க்கமுடியாத ஒன்று. அதனால் அஜித் ஆப்ரேஷனை எல்லாம் முடித்துவிட்டு சீக்கிரம் மீண்டும் நடிக்க வரவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Next Story