யோகிபாபு ரேஞ்சுக்கு மாறிய அஜித்! இது கனவா இல்ல நிஜமா? ஒரு முடிவோடத்தான் இருக்காரு
விடாமுயற்சி திரைப்படம் வருமா வராதா என்ற ஒரு கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்து வந்தது. ஏனெனில் படம் ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து இருந்தது விடா முயற்சி திரைப்படம். முதலில் விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து விலகியது.
அதன் பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தது. லைக்காவின் பொருளாதார நெருக்கடியால் படம் கிடப்பில் போடப்பட்டது என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை விடா முயற்சி திரைப்படம் சந்தித்தது. எப்படியோ ஒரு வழியாக படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி முழுமூச்சாக நடந்து கொண்டு வருகின்றது.
துணிவு வாரிசு என விஜய்யும் அஜித்தும் கடைசியாக மோதிக்கொள்ள அதன் பிறகு விஜயின் லியோ திரைப்படம் மட்டுமே வெளியானது. இதில் அஜித் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். மீண்டும் அந்த மாதிரி ஒரு போட்டி எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இருந்தாலும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது முடியும் தருவாயில் இருக்கின்றது. படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தகவலின் படி குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடந்து வருகின்றதாம்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஒரே நேரத்தில் விடாமுயற்சி திரைப்படத்திலும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மதியம் வரை விடா முயற்சி திரைப்படத்திலும் மாலை நேரத்திற்கு பிறகு குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
எப்படியாவது விடாமுயற்சி திரைப்படத்தை இந்த தீபாவளிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஒரு முயற்சியில் அஜித் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரின் இந்த போக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் சிலர் யோகி பாபு ரேஞ்சுக்கு மாறிவிட்டாரே தல என கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் இப்போது காமெடி நடிகராக இருந்தாலும் மிகவும் பிஸியான நடிகராக இருப்பவர் யோகி பாபு. சின்ன பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரையிலான அனைத்து படங்களிலும் யோகி பாபுவை பார்க்க முடிகிறது. எந்த ஒரு ஓய்வும் எடுக்காமல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதை வைத்து அஜித்தை இந்த மாதிரி ஒப்பிட்டு கூறி வருகிறார்கள்.