Categories: Cinema News latest news

குட் பேட் அக்லி ரிலீஸ்!.. வேறலெவல் பிளானா இருக்கே.. தமிழ்நாட்டுல ஒர்க்அவுட் ஆகுமா?..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தற்போது கார் பந்தயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அஜித் தான் கமிட் செய்திருந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார். இந்த வருடம் முழுவதும் கார் பந்தயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகின்றது.

ஆனால் இந்த வருடத்தில் நடிகர் அஜித்தின் இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

காரணம் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் அஜித்தின் எந்த திரைப்படமும் வெளியாகாமல் இருந்தது தான். இதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் மூன்று விதமான தோற்றங்களில் நடித்திருக்கின்றார். இதனால் தனது உடல் எடை குறைத்து இந்த திரைப்படத்தில் வேற கெட்டப்பில் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. இப்படம் குறித்து பேசும்போது பில்லா அஜித்தை மீண்டும் பார்க்கலாம் என்பது போன்று கூறி வந்தார்கள். இதனால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் இப்படத்தை ஒரு நாளுக்கு முன்னதாக அதாவது ஏப்ரல் 9-ம் தேதி இரவு பிரீமியர் ஷோவை திரையிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே மைத்ரி மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்த புஷ்பா 2 திரைப்படத்தை தெலுங்கானாவில் பிரீமியர் ஷோவாக ரிலீஸ் செய்திருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இதே பாணியில் வெளியிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் தெலுங்கானாவில் ஸ்பெஷல் ஷோவுக்கு எப்போதும் அனுமதி இருக்கின்றது.

தமிழகத்தில் அதுபோன்று கிடையாது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்து தமிழகத்தில் ஸ்பெஷல் மற்றும் பிரிமியர் ஷோக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு மட்டும் அனுமதி கிடைக்குமா? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை அப்படி பிரிமியர் ஷோ வெளியானால் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Published by
ramya suresh