சீறிப்பாய்ந்த அஜித் மகன்!.. 3 தங்க மெடல்.. அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பொறந்துருக்கே..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் பைக் மற்றும் கார் ரேசிங்கில் அலாதி பிரியம் கொண்டவர் அஜித். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தான் கமிட் செய்திருந்த இரண்டு திரைப்படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகின்றார்.
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி ரிலீஸ்-க்கு ரெடியாக இருக்கின்றது. விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது.
இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் கடந்த டிசம்பர் மாதமே முடித்துக் கொடுத்திருக்கின்றார் நடிகர் அஜித். தற்போது துபாயில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொண்ட அஜித் மூன்றாம் இடம் பிடித்து அசதி இருந்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற உள்ள கார் பந்தயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த இருக்கின்றார். மேலும் இந்த வருடத்தில் 9 மாதம் அதாவது அக்டோபர் மாதம் வரை எந்த திரைப்படங்களிலும் நடிக்க மாட்டேன் தனது முழு கவனமும் கார் பந்தயத்தில் மட்டுமே என்று சமீபத்தில் பேட்டியில் கூட பகிர்ந்திருந்தார். இது அவரின் சினிமா ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இருப்பினும் இந்த வயதிலும் தன்னம்பிக்கையை விடாமல் கார்பந்தயத்தில் கலந்து கொண்டு அசத்தி வருகின்றார் என்று அவரை புகழ்ந்து பேசி வருகிறார்கள். நடிகர் அஜித்தை போலவே அவரது மகன் ஆத்விக்கும் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றார். நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா என்கின்ற மகளும், ஆத்விக் என்கின்ற மகனும் இருக்கின்றார்.
அஜித்தின் மகன் ஆத்விக் அதிக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் கொண்டவர். அதிலும் கால்பந்து போட்டி என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். சென்னையின் எப்சி ஜூனியர் அணியில் இடம்பெற்று இருக்கின்றார். மேலும் பள்ளியில் நடைபெற்று வரும் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்திருக்கின்றார்.
அதாவது அவரது பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட ஆத்விக் முதலிடம் பிடித்திருக்கின்றார். மொத்தம் மூன்று ஓட்டப்பந்தயங்கள் நடைபெற்ற நிலையில் மூன்று ஓட்டப்பந்தயங்களிலும் முதலிடம் பிடித்து மூன்று தங்க மெடலை வாங்கி இருக்கின்றார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடி முதலிடம் பிடித்த ஆத்விக் அதன் பிறகு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்திருக்கின்றார்.
இதனை வீடியோவாக எடுத்த ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு என்று தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ பல லட்சம் லைக்குகளை குவித்து வருகின்றது.